Tamilnadu

News March 29, 2024

1ம் தேதி முதல் மதுரையில் துவக்கம்

image

மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நீச்சல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சிறுவர், சிறுமியர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக (உயரம் 125 செமீ மேல்) இருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி வகுப்பு தொடர்பாக நீச்சல்குளத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

News March 29, 2024

திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர்கள் தெருமுனைப் பிரச்சாரம்

image

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளான குமரன் திருநகர், ஒய்.எம்.ஆர்.பட்டி, விவேகானந்தா நகர், என்.ஜி. ஓ. காலனி போன்ற பகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.

News March 29, 2024

மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் – மாவட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கூடலூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (30.3.24) காலை 8 மணிக்கு கூடலூரில் நடைப் பெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில், முதல் பரிசு ரூ.10,001, 2 ஆம் பரிசு ரூ.5,001, 3 ஆம் பரிசு ரூ.3,001 என அறிவிக்கப் பட்டுள்ளது.

News March 29, 2024

தேர்தலை புறக்கணித்த கிராம மக்களிடம்  பேச்சுவார்த்தை தோல்வி

image

மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கமுதி வட்டாட்சியர் சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், விஏஒ பாண்டி, தனிபிரிவு உதவி ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

News March 29, 2024

பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி தேனாடுகம்பை காவல்துறையினர் அவர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 25ம் தேதி கடநாடு கிராமத்தில் முன் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக, எல்.முருகன் மீது தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 29, 2024

நெருங்கும் தேர்தல்: ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்
கூட்டம் இன்று ஆட்சியர் ஷஜீவனா
தலைமையில் நடைபெற்றது.  உடன், தேர்தல் பொது பார்வையாளர் கௌரங் பாய் மக்வானா   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.

News March 29, 2024

நாகை: நாதக கௌரவித்த சிபிஐ வேட்பாளர்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா, வேளாங்கண்ணி அடுத்த பரவை காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எதிரே வந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வை.செல்வராசு மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News March 29, 2024

ஈரோடு வந்த கமல்ஹாசன்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைக்காக  இன்று ஈரோடு வருகை தந்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

News March 29, 2024

ஈரோடு வருகை தரும் முதல்வர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து  சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

News March 29, 2024

செங்கல்பட்டு: போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

image

மறைமலைநகர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை கீழே விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளித்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியது. இந்நிலையில், இதனை கண்ட போக்குவரத்து காவலர் மணிகண்டன் உடனடியாக வழிகாட்டி பலகையை சரி செய்தார்.
அவருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

error: Content is protected !!