India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இன்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் ஏலகிரி மலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள், அதிமுக நிர்வாகிகளுடன் ரெகுநாதபுரம் வல்லபாய் ஐயப்பன் திருக்கோயிலில் இன்று வழிபாடு செய்த பின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கான பிரச்சார பயணத்தை கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து துவங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 30) மதியம் 1 மணி வரை 5 வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மக்களவை தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், அதிமுக மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் ஆகியவற்றின் வேட்பாளர்கள் 5 பேர், 18 சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
திருப்பூர் மக்களவை தொகுதியில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 30) திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேருந்துகளில் ஒட்டினார்.
நீலகிரி மாவட்டம் கூடலுர் SS நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞர், பாண்டியார் குண்டமுலா ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக அக்கபக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதி வாலிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த மூன்று லட்சத்து 100 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேற்று தருமபுரி மாவட்டத்தில் வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.