India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்தாலும் ஆளுநர் அனுமதி கொடுத்தால்தான் எதையும் செயல்படுத்த முடிகின்றது என்று தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் இராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 264வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பா.ஜெயப் பெருமாள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐஐஎம்) 12ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, ஐஐஎம் திருச்சியின் தலைவர் ஜலஜ் தானி தலைமை வகித்தார். இதில், இந்திய எரிவாயு ஆணையத் தலைவர் சந்திப் குமார் குப்தா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். அப்போது, இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறும் நீங்கள் அனைவரும் சவால்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 23வது வார்டு பகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமையில் நகர செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரால் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டது. இதனால் சிதம்பரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜன் தாங்கள் ஊராட்சியில் அமைந்துள்ள தளவாய்க் குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வார மாட்டு சந்தை நடைபெற்று வருகின்றது. இதில் விவசாயிகள் தங்களுடைய மாடுகளை நேரடியாக விற்பனை செய்தும் வாங்கியும் செல்கின்றனர். இதில் ஆடு,கோழிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி சிறப்பு திருப்பலியில் வழிபாடு நடத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.