Tamilnadu

News March 31, 2024

வேலூருக்கு 2 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம்

image

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 31 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சம் நோட்டாவுடன் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். எனவே கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 31, 2024

ராமநாதபுரம்: ரூ.1 கோடி… கோயிலில் அதிர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகியுள்ளன. இதனையறிந்த சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் நகை மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 31, 2024

நெல்லை: வாகன சோதனையில் துப்பாக்கி சிக்கியது

image

நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு நெல்லை அடுத்துள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடியில் நேற்று (மார்ச்.30) போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் அனுமதி பெறாமல் வைத்திருந்த எஸ்பிபிஎல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. 

News March 31, 2024

திருச்சி வளர்ச்சி அடைவது உறுதி- அண்ணாமலை

image

திருச்சியில் பாஜக கூட்டணி கட்சியான அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்பரை மேற்கொண்டார். அப்பொழுது, திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றா. தேஜகூ வேட்பாளர் வெற்றி பெற்றால் திருச்சி வளர்ச்சியடைவது உறுதி எனக் கூறினார்.

News March 31, 2024

சேலம்: ரயில் ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு ரத்து!

image

கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

News March 31, 2024

புதுச்சேரி தொகுதி எப்படி மக்களே?

image

மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு வைத்திலிங்கம்(காங்), நமச்சிவாயம்(பாஜக), தமிழ்வேந்தன்(அதிமுக) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 3 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 31, 2024

விழுப்புரம்: டிராக்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

image

செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (55), விவசாயி. நேற்று நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடி குப்பத்திற்கு சைக்கிளில் (மார்ச்.30) சென்று கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் நிலை தடுமாறி டிராக்டர் டிரைலர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது
குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

ராணிப்பேட்டை: புதிய நீதிமன்றம் திறப்பு விழா!

image

ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், வேலூர் பொறுப்பு நீதிபதியுமான (போர்ட்போலியோ) ஆர். சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

News March 31, 2024

கள்ளக்குறிச்சி தொகுதி எப்படி மக்களே?

image

மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு மலையரசன்(திமுக), குமரகுரு(அதிமுக), தேவதாஸ் உடையார்(பாமக) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 3 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 31, 2024

சிவகங்கை தொகுதி எப்படி மக்களே?

image

மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு கார்த்திக் சிதம்பரம்(காங்), சேவியர்தாஸ்(அதிமுக), தேவநாதன்(பாஜக), எழிலரசி(நாம் தமிழர்) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 4 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

error: Content is protected !!