India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். நேற்று (மார்ச் 30) இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாய்க்கால் தூர்வாரும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கிச் கொண்டனர். அதில் சம்பவயிடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தனர்.
காங்கேயம் சிவன்மலையைச் சேர்ந்தவர் சிவ பாரத், பூ வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா. இருவரும் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிவ பரத் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூர்ணிமா அளித்த புகாரில் சிவபாரத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்காத சின்னங்களை சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை வேட்பாளர் அருணா தேவிக்கும்,மக்கள் நீதி மையத்தின் டார்ச் லைட் சின்னம் சுயேட்சை வேட்பாளர் என்.பி. ராஜாவுக்கு கிடைத்துள்ளது.
காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில்
கருஉருமாரி சுப்பிரமணியர் முன்பாக
“வேல் விருத்தம்
மயில் விருத்தம்”
நிகழ்ச்சி நாளை (ஏப்ரல்.1) மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவுரு மாமலை
பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இதில், பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சிறுமியின் வீட்டிற்கு சென்று நடத்திய விசாரணையில் கோபி என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. குழந்தை திருமணம் செய்த கோபி என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது சுமார் 2 கோடியே 29 லட்ச ரூபாய் சிக்கியது. விசாரணையில் இந்த பணம் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் உரிய ஆவணமில்லாததால் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் முறையாக தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 22 போ் போட்டியிடுகின்றனா். இதில் பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜக), விஜய்வசந்த் (காங்கிரஸ்) , பசலியான் நசரேத் (அதிமுக) , மரியஜெனி பா்கிளாரா மைக்கேல்(நாம் தமிழா் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேர் போட்டியிடுகின்றனா்.
Sorry, no posts matched your criteria.