Tamilnadu

News August 24, 2025

காங்கேயத்தில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சரவணா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுபாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News August 24, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (23.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 24, 2025

நீலகிரி ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு

image

நீலகிரி, விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சியாக கொண்டாடப்படும். அதேப்போல் காவல்துறையின் ஒத்திகையை நடைப்பெற்றது. விநாயகர் சதுர்த்தியின்போது அசம்பாவித ஏதேனும் நடக்காமல் காவல்துறையின் பாதுகாப்பு அதிகமாக காணப்படும் என காவல்துறையின் சார்பாக தெரிவித்தனர். இதன் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

News August 24, 2025

காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டை!

image

ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் ந.மிருநாலினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.ஹிலாரினா, ஜோஷிடா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 24, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரூ.5.00 ஆகவே நீடிக்கிறது.

News August 24, 2025

பெண் குழந்தைகளுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News August 24, 2025

ஆண்டிபட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.

News August 24, 2025

மதுரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தேவாங்கு

image

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், குன்னாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருகின்றன. தேவாங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு உள்ள சூழலில் சாலை விபத்துகளில் இவை அடிக்கடி சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News August 24, 2025

மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி வகுப்பு

image

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துரித உணவிற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28 துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இருபாலரும் கலந்துகொண்டு மத்திய அரசின் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்பு தொழில் மையத்தின் கீழ் லோன் வசதியும் பெற்றுக்கொள்ளலாம்.

News August 24, 2025

கிருஷ்ணகிரியில் இன்று எருது விடும் திருவிழா

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மங்கம்மாபுரம் என்னும் சிங்கார கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 24) எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்கள் கே .பி முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி கே . அசோக் குமார் போன்றோர் தலைமை வகித்து விழாவை தொடங்க உள்ளனர். இதில் 101 பரிசுகளுக்கு மேல் வழங்கப்பட உள்ளன.

error: Content is protected !!