Tamilnadu

News April 1, 2024

திருவள்ளூர்: தேர்தல் பணிமனை திறப்பு

image

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு கூட்டுச்சாலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிமனையை நேற்று இரவு திறந்து வைத்தார் எம்எல்ஏ ராஜேந்திரன். உடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 1, 2024

அரியலூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

image

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

நெல்லை: ஜேசிபி திருடியவர் கைது

image

காந்திஸ்வரன் புதூரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் ஜேசிபி வைத்து ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார். இவரது ஜேசிபி திடீரென திருடுபோனது. இது குறித்து இவர் அளித்த புகாரின்படி கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிந்து தென்காசி மாவட்டம் சுரண்டை துவரங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரை நேற்று (மார்ச் 31) கைது செய்தார். ஜேசிபியை பறிமுதல் செய்தார்.

News April 1, 2024

நீலகிரி பாஜக வேட்பாளர் வாகனத்தில் அதிமுக கொடி

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று உதகை நகரம் குந்தா பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது பிரச்சார வாகனத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டியிருந்தன. அதில் அதிமுக கொடி இடம் பெற்றிருந்தது. இது குறித்து வேட்பாளர் எல்.முருகன் கவனத்திற்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கொடி கழற்றப்பட்டது.

News April 1, 2024

கிராம உதவியாளர் பணி நிறைவு பாராட்டு விழா

image

வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம் படூர் கிராம உதவியாளர் சேகர் பணி நிறைவு பாராட்டு விழாவில் வட்டாட்சியர் பொன்னுசாமி, ஆ.தி.நலத்துறை வட்டாட்சியர் சத்யன், துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார், வட்ட உணவு வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், கிராம நிர்வாக அலுவலர் பர்கத் நிஷா, இப்ராகிம், கிராம ஊழியர் சங்க தலைவர் ம.அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News April 1, 2024

கோழி குஞ்சு உற்பத்தி நிறுவனம் மூடல்

image

கொரோனாவிற்கு பின் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி 1½ ஆண்டாக நிறுத்தப்பட்டதால் ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் கார்டன் பராமரிப்பு, எந்திரங்களை சுத்தம் செய்வது முதலிய வேலைகள் வழங்கப்பட்டன. நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் ரூ. 3.50 லட்சம் செட்டில்மென்ட் தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் நிர்வாகம் செலுத்தி உள்ளது. மீண்டும் வேலை வழங்க வேண்டும் என ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 1, 2024

கிருஷ்ணகிரி: திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 31) மாலை அலேசீபம் பகுதியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

பழனி வணிகர் சங்கத்தில் இப்தார் விருந்து

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இப்தார் விருந்து நேற்று மாலை நடைபெற்றது .
இதில் பழனி வணிகர் சங்க தலைவர் ஜே பி சரவணன், பொறுப்பாளர்கள் ஹரிஹர முத்து, கந்த விலாஸ் பாஸ்கரன், தவ்பிக், நிவாசுதீன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .இதில் நோன்பு கஞ்சி, பழ ரசங்கள் மற்றும் பழ வகைகள்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

News March 31, 2024

மயிலாடுதுறையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

image

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 31, 2024

மசாஜ் சென்டரில் வாலிபர் மர்ம மரணம்

image

அரக்கோணம் தாலுகா பள்ளூர் அடுத்த பாடி கிராமத்தில் மசாஜ் சென்டர் உள்ளது. இந்த மசாஜ் சென்டரில் கடந்த 4 மாதங்களாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகாந்த் (22) மசாஜ் செய்து விட்டு செல்வது வழக்கம். இன்று இரவு 7 மணிக்கு மசாஜ் சென்டரில் திடீரென கிருஷ்ணகாந்த் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். டாக்டர் பரிசோதித்ததில் கிருஷ்ணகாந்த் இறந்தது தெரிந்தது.

error: Content is protected !!