India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மச்சுவாடி பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து கும்பலாக சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 500 சீட்டுக்கட்டுகள் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது
வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இருசக்கர வாகனத்தை சோதனைசெய்தபோது வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் வீராணம் சுரேஷ்(34),கார்த்திக்(25)மனோசங்கர் (19) மற்றும் சுரண்டை நாகராஜா (35) ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து,கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க.வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கட்சியினர் ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு கேட்டு விளம்பரம் வரைந்திருந்தனர் . இந்த சுவரை நேற்று மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமினாட்டில் கல்லக்குடி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே குருங்களூரைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்.இவா் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளா்த்து வருகிறாா்.இக்கொட்டகையிலும் , அருகிலிருந்த வைக்கோல் கட்டுகளிலும் நேற்று அதிகாலை தீ பற்றி எரிந்தது.தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.இந்த விபத்தில் ஒரு பசு மாடு உயிரிழந்தது.
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சி. எம். செய்யதுபாபு , மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆட்சியர் சங்கீதாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “100 சதவீதம் வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூர் ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை பேசுகையில், கச்சத்தீவை தாரைவார்த்ததன் மூலம் நாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை ஆய்வு மையம் மழை, வெள்ளம், வெயில் போன்ற பருவநிலைகளை கணிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிச. மாத மழை வெள்ளத்துக்கு பின்னர் இந்த வானிலை ஆய்வு மையம் செயல்படவில்லை என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார். மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் இதை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீலகிரிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (மார்ச் 31) மாலை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடும்பத்துடன் சென்றார். யானைகளுக்கு உணவு அளித்தார். பின்னர் யானைகள் பராமரிப்பு குறித்து ஆஸ்கர் விருது பெற்ற பாகன் பொம்மன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். முன்னதாக வனத்துறை வாகனத்தில் காட்டுக்குள் சவாரி சென்றார்.
கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு சென்ற தூத்துக்குடி இளைஞர் ஒருவர் பாறை பகுதியில் இருந்து சுற்றுலா தலத்தை எட்டிப்பார்த்த போது 100 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி பள்ளத்தில் இறங்கி படுகாயங்களுடன் வலியில் தவித்து வந்த தன்ராஜ் (22) என்ற இளைஞரை உயிருடன் மீட்டு மேலே அழைத்து வந்தனர்.
Sorry, no posts matched your criteria.