India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவின உச்சவரம்பு ரூ.
95 லட்சம் என்பதால் அந்தத் தொகைக்குள் செலவினங்களை வரைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காங்கேயம் சாலையில் நடைபெற்ற சோதனையின் போது செல்வக்குமார் என்பவரது நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 53,440 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 1) காலை 8 மணி முதல் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று அவர் பொது மக்களிடம் பல்வேறு வாக்குகளை அளித்து வாக்கு சேகரித்தார், அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.
மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து, பிரபல நடிகை ரோகிணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து இன்று மற்றும் நாளை மதுரை முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பல்வேறு கட்சி விஐபிகள் இன்று முகாமிட்டுள்ளனர். டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல் 1) மாலை தாழையூத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக வாகை சந்திரசேகர் அம்பை பகுதியில், தங்கபாலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முக்கூடல் பகுதியிலும், கனிமொழி வள்ளியூர் பகுதியிலும் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் திமுக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் மணியை ஆதரித்து உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலிஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவிக்னேஷ். இவர் தேனி எஸ்.பி இடம் தனது தங்கை மற்றும் அவரது உறவினர்கள் 8 பேரிடம் பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கனகதுா்கா, சூா்யா, சரண்யா ஆகியோர் மொத்தம் ரூ.1,11,21,000 பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் நேற்று (மார்.31) போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி , குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பீடர் சாலையில் ராமநாதபுரம் மாவட்ட சர்வோதய சங்க கட்டிடத்தில் இலவம் பஞ்சு மெத்தை, பர்னிச்சர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இன்று இங்குள்ள இலவம் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Sorry, no posts matched your criteria.