India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எலச்சிபாளையம் அருகே கொன்னையார் கிராமம், நல்லையன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (43). எல்.ஐ.சி., முகவரான இவர் நேற்று இரவு 11 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வையப்பமலையில் இருந்து கொன்னையார் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மாமல்லன் என்பவர் அனுமதியின்றி எடுத்து வந்த ரூ. 65 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுவையில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.சி.பி.எஸ்.இ.வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி.பாடபுத்தகம் வாங்கப்பட்டது.
திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை ஆறு மணிக்கு தென்னூர் மரக்கடை அருகே மறைந்த விஜயகாந்த் அவர்களின் மனைவி, பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து திருச்சி வந்த அவருக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரமோகன் அவருக்கு பொன்னாடை அளித்து சிறப்பு வரவேற்பளித்தனர். உடன் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, சிவபதி, மற்றும் மோகன் இருந்தனர்.
இன்று தென்தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக மின் வயர்கள் திருடு போனது. அதிலும் குறிப்பாக வள்ளியூர் மறவர் காலனியில் வசிக்கும் ஒருவர் வீட்டில் தொடர்ச்சியாக 3வது முறை மின் வயர்கள் திருடு போனதால் வீட்டின் உரிமையாளர் திருடனை கண்டுபிடித்து தருபவருக்கு வெள்ளி மோதிரம் பரிசாக தருவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சந்தியா என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிந்த நிலையில் இருவரும் பிரிந்திருந்த சூழ்நிலையில் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் வெளிநாடு சென்றதாகவும், பெண்ணை மீட்டு தனது பணத்தை பெற்று தருமாறு சந்தோஷ் எஸ்.பி அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் சென்னை பெங்களூர் சாலையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென அருகில் இருந்த டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் மீது மர்மநபர்கள் சிலர் இன்று தீ வைத்ததால் சாலையில் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.
துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஒரு பயணியின் வயிற்றில் கடத்தி வரப்பட்ட ரூ.24,62,400 மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேளாங்கண்ணி திமுக பேரூர் கழகம் சார்பில் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பணி மனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி சிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.