Tamilnadu

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

திருவள்ளூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) திருத்தணியில் வெப்ப அளவு 100°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

லாரி மோதி மின் கம்பம் உடைந்தது

image

ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது நேற்று இரவு அவ்வழியே வந்த லாரி மின்கம்பத்தின் மீது மோதியதில் பலத்த சேதம் அடைந்த மின்கம்பம் உடைந்தது. இதனால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்விநியோகம் பாதித்தது.

News April 2, 2024

வாலிபரை அவதூறாக பேசி தாக்கியவர் கைது

image

மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவரை அதே ஊரைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் அவதூறாக பேசி மிரட்டிய தாக்கினார். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் படி மானூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆனந்தராஜை தாக்கிய முருகனை இன்று (ஏப்ரல் 1 ) கைது செய்தார்.

News April 2, 2024

தாழையூத்து: டிடிவி தினகரன் வேண்டுகோள்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல்1) இரவு தாழையூத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்தவேனில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசினர். அப்போது அவர், அ.ம.மு.க. தொண்டர்கள் நயினர் நரேந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News April 2, 2024

காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

image

ஆற்காடு பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை விளக்கி அதன் கூட்டணியை சார்ந்த திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

News April 2, 2024

தொண்டையில் மீன் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி, வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் அருகே உள்ள மணிமுக்தா அணையில் மீன் பிடிக்க இன்று சென்றுள்ளார். மீன் வலையில் சிக்கும் மீனை தனது வாயால் எடுக்கும் பழக்கம் கொண்ட செல்லமுத்து நேற்று தன் வலையில் சிக்கிய மீனை வாயால் எடுக்க முயன்ற போது மீன் தொண்டையில் சிக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2024

இண்டூரில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி நேற்று இண்டூர் பகுதியில்  வாக்கு சேகரித்தார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் தடங்கம், சுப்பிரமணி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன்,கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

விருதுநகர்:ராதிகாவிற்கு ஆதரவு திரட்டும் டிடிவி!

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அக்கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (02.04.2024) மாலை விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராதிகா சரத்குமார் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 2, 2024

திருச்சி:பள்ளிவாசல் அருகே வாக்கு சேகரித்த அமைச்சர

image

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் இன்று மாலை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், இந்திய கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

News April 2, 2024

காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி 

image

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அறச்சலூர் அருகில் உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள சொர்ணபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மக்கள் கலந்து கொண்டு காலபைரவரின் ஆசியை பெற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!