Tamilnadu

News April 2, 2024

சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தில் கள்ள சாராய விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று சின்னசேலம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அதே கிராமத்தைச் சேர்ந்த அமராவதி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; தலை நசுங்கி மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே சாலை விபத்தில் நேற்று ஒருவர் பலி அரிமளத்தில் மொபட் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் மொபட்டில் வந்த சத்திரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (45). இவர் வாகன விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

குற்றாலத்தில் குவிந்த கூட்டம்

image

கோடைக்காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் நீர் நிலைகளிலும் நீரின் அளவு குறைந்துள்ளது.கோடை வெயிலிலும் குறைந்த அளவு ஓரமாக கொட்டி வரும் குற்றால அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

News April 2, 2024

சென்னைக்கு வருகை தந்துள்ள துணை ராணுவ வீரர்கள்

image

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று முதல் வருகை தர உள்ளனர். இவர்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையிலும் பதட்டமான வாக்கு சாவடியில் கண்காணிக்க உள்ளனர் இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

நாமக்கல்லில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.2°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

திருச்சியில் பயங்கர விபத்து; இருவர் சம்பவ இடத்தில மரணம்

image

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 நபர்களுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்பு தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி பின்புறம் மோதி இன்று விபத்துக்குள்ளானது பேருந்து ஓட்டுனர் ஓட்டுனரான சந்திரன் மற்றும் பேரனுடன் பயணித்த மூதாட்டி பழனியம்மாள் என இருவர் உயிரிழந்தனர்.

News April 2, 2024

விருதுநகர் அருகே 5 பேர் அதிரடி கைது!

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி பீமராஜா (26) சத்யா நகரை சேர்ந்த ஜோதீஸ்வரன் (23) ஆகியோரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இL புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது.

News April 2, 2024

தஞ்சையில் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது இதையொட்டி நேற்று தஞ்சை பள்ளி யக்கிரஹாரம் பகுதியில் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணியை தாசில்தார் அருள்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த பூத் சிலிப்பில் சட்டமன்ற தொகுதியின் பெயர், வாக்காளர் அடை யா அட்டை எண், பாகம் எண். வாக்குச்சாவடியின் பெயர். வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

News April 2, 2024

நெல்லையில் இன்று கனிமொழி பிரச்சாரம்

image

இந்தியா கூட்டணி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு நெல்லை டவுன் வாகையடி முக்கில் திமுக மகளிர் அணி தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வாக்கு சேகரிக்க உள்ளார். ஏற்பாடுகளை திருநெல்வேலி பாராளுமன்ற இந்தியா கூட்டணி தேர்தல் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.

News April 2, 2024

வீடு புகுந்து 9 சவரன் நகை திருட்டு

image

பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன. இவர் வயலுக்குச் சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இது குறித்து அவர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

error: Content is protected !!