Tamilnadu

News August 24, 2025

மருத்துவ பயனாளிகளுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

image

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மருத்துவ பயனாளிகளுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆணைக்கிணங்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், அன்னதானம் வழங்கினார். நிகழ்வில் கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: இருதரப்பின் இடையே தகராறு

image

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கடைகள் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பினர் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீரென படுத்துக்கொண்டு சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

News August 24, 2025

விழுப்புரம் காவல்துறை சார்பில் பதிவு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணிவோம் பாதுகாப்பை உறுதி செய்வோம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

News August 24, 2025

கோவை: புகார் அளிக்க அழைப்பு

image

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் செயல்பட்ட ‘லிங்க் 2 லிங்க்’ தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பலர் ஏமாந்ததாக புகார் எழுந்தது. எனவே கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவன இயக்குனர் சுதாகர் மற்றும் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

News August 24, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News August 24, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News August 24, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (23/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரச காலத்தில் இந்த எண்களை அழைக்கலாம். அல்லது 100ஐ அழைகவும்.

News August 24, 2025

சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 75 இடங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகளை பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ‘IoT-based environmental sensors’ என்ற கருவி மூலம், வெப்பம், ஈரப்பதம், மாசு அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிலேயே இத்தகைய கருவிகள் பொருத்தும் முதல் நகரமாக சென்னை மாறும் என கூறப்படுகிறது.

News August 24, 2025

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

image

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாயை சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த வட மாநில வாலிபர்கள் மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றனர். இந்த நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் வரும் சத்தத்தை கேட்டு வட மாநில வாலிபர்கள் தப்பி ஓடியுள்ளார்.

News August 24, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.

error: Content is protected !!