Tamilnadu

News April 2, 2024

திருவாரூர்: 100% வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரம்

image

திருவாரூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி எல்லோரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்.துண்டு பிரசுரங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

News April 2, 2024

உதவித்தொகையை கொச்சைப்படுத்தாதீர்கள் 

image

சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ‘திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம், என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொருளாதார யுக்தி. இந்த திட்டத்தை பலர் கொச்சைப் படுத்துகிறார்கள், மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ரூ.1000, ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது எனக் கூறினார்.

News April 2, 2024

புதுவையில் இளைஞர் சிக்கிக் கொண்டார்

image

புதுச்சேரி மிஷின் வீதியில் வ.உ.சி பள்ளி அருகே இருந்த மரம் இன்று திடீரென்று முறிந்து சாலையில் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தது.

News April 2, 2024

நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

News April 2, 2024

மக்களவைத் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத்  தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் ! என்று அழைப்பிதழை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ளார். இதன்படி
இவ்விழாவில் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மக்களவைத் தொகுதியில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கின்றோம்.

News April 2, 2024

வைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

image

வெள்ளிமலை வனப்பகுதியில் மழையின்மை மற்றும் வெயில் தாக்கம் காரணமாக வைகை ஆறு வறண்டு போனது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீருக்காக வைகை ஆற்றை சார்ந்துள்ள கடமலை – மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 2, 2024

அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு இன்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நடிகர் சிங்கமுத்து நெல்லைக்கு வருகை தருகிறார்‌. அவரை நெல்லை அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்க உள்ளனர்.

News April 2, 2024

அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு

image

திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவர்குடி மற்றும் வங்கநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. பலமுறை அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்கள் அறிவித்தும், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கியும் ,எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகை வழங்கி விழிப்புணர்வு.

image

ஆரணி பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு முதல்முறை வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலதாளம் மற்றும் சீர்வரிசை தட்டுடன் சென்று பேருந்தில் பயணித்த முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகையை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 2, 2024

மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க வேண்டும்-ரோகிணி

image

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (02.04.2024) நடிகை ரோகிணி தெற்கு வாசல் மார்க்கெட், பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

error: Content is protected !!