Tamilnadu

News March 17, 2024

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

image

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

News March 17, 2024

ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகம்

image

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அணிகுதிச்சான் ஊராட்சி பூவாணிப்பட்டில் 2023 – 2024 திட்டத்தின் கீழ் ரூ.222.00 லட்சம் மதிப்பீட்டில் முழுநேர கூடுதல் பொது நூலக கட்டுமான பணிக்கு நேற்று (மார்ச்.16) சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

News March 17, 2024

களமிறங்கியது தேர்தல் பறக்கும் படை குழு

image

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியாற்றுவதற்கான குழுவினர் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று புறப்பட்டனர். அவர்களுடன் வீடியோ கேமரா மேன் மற்றும் போலீசார் சென்றனர்.

News March 17, 2024

நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம்

image

சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News March 17, 2024

தர்மபுரி: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம்

image

தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் விவரம்; 1.மாவட்டத் தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி கைபேசி எண்- 9444161000  2.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்- 9884447581  3.மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிஸ் ராஜ்குமார் -9445000908 4.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது – 9445008135 இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

image

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

News March 17, 2024

திருச்செந்தூரில் புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணியாற்றிய குருசந்திரன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாறுதலில் சென்று விட்டார். இந்த நிலையில் புதிய கோட்டாட்சியராக சுகுமாரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை சக அலுவலக அதிகாரிகள், வட்டாட்சியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News March 17, 2024

தாமரையில் பிரதமர் மோடி உருவம் 

image

கோவையில் நாளை (மார்ச்.18) பாஜக சார்பில் பிரதமரின் ரோட் ஷோ நடைபெற உள்ளது. ரோட் ஷோ நடைபெறும் வழி முழுவதும் பாஜகவினர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் யுஎம்டி ராஜா, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாஜகவின் சின்னமான தாமரையில் மோடியின் உருவத்தை வரைந்து வெல்கம் மோடி ஜி எனவும், மலர்ந்த முகமே வருக எனவும் வரைந்து அசத்தியுள்ளார்.

News March 17, 2024

தஞ்சையில் பறக்கும்படை வாகனம் துவக்கம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் அவர்கள் நேற்று (16.03.2024) துவக்கி வைத்து கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News March 17, 2024

முதல்வருக்கு அமைச்சர் நன்றி

image

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நே‌ரி‌ல் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இ‌தி‌ல் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!