India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர், உடுமலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தணிக்கை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலை வழியாக வந்து கொண்டிருந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள்
இல்லாமல் கொண்டு வந்த
30 ஆயிரம் மதிப்புள்ள 158 பொன்னாடைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொன்னாடைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வட்டாட்சியர் சுந்தரம் முன்னிலையில் வைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் பகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரை கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற போஸ்டர்களை கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவின் மாணவர் சிவாவிற்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் சிறந்த கலைஞருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கலை இளம் மணி வளர்மணி சுடர்மணி நன்மணி முதுமணி விருதுகள் வழங்கப்பட்டன. வீரம் விதை சிலம்பாட்ட குழுவின் மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாளை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 15 ஆவது செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள வெற்றி திருமண மஹாலில் நடைபெற்றது. முதல் மாநிலத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் மீறினால் சி – விஜில் மற்றும் சுவிதா ஆகிய மொபைல் ஆப்கள் மூலம் போட்டோ, வீடியோவுடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் 1800-425-5799, 0452 2535374, 0452 2535375, 0452 2535376, 0452 2535377, மற்றும் 0452 2535378 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க மதுரை மாவட்ட காவல்துறையில் 24மணி நேரமும் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண்ணை (9498101395) தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். புகார்தாரர் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதி சேர்ந்த தாமரைச்செல்வி இவர்
அருகே உள்ள விவசாயி பகுதிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் பெட்டியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது வீடு திரும்பிய தாமரைச்செல்வி இவர் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்து 13 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவத்தில் மார்ச் 16ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் மக்களவை பொதுத் தோ்தல் நடைபெற இருப்பதால் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்ததால் நாளை 18 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
Sorry, no posts matched your criteria.