India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிகழ்வில் நேற்று முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் அய்கோ தமிழர் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சிலத்தூர் அருகே உள்ள கிளாமங்கலத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வரும் பொழுது கிராமவாசிகள் மாப்பிள்ளையை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கூறி அப்பகுதி இளைஞர்கள், எச்சரிக்கை போஸ்டர் ஒட்டி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW
காட்டுமன்னார்கோயில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ஜமால் உசேன் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு வந்த 11 வயது சிறுமிக்கு ஜமால் உசேன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஜமால் உசேனை இன்று (ஆகஸ்ட் 23) கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி பாஜக சார்பில் நகர் பகுதியில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மகளிர் அணி நகர பொறுப்பாளர் விமலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உறுப்பினர் சேர்க்கை, கிளை அமைப்பது, பொறுப்பாளர் நியமனம், மங்கி பாத் நிகழ்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை, ஆற்காடு தோப்புக்கனா அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் (ஆக.24) இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)
2025-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விரும்புவோர் 01.09.25 முதல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், செப்.30-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே விசாரணைக்கு பிறகு உரிமம் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என மாநகர காவல் ஆணையர் காமினி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபி வட்டம், கோபி ஈரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள சீதா கல்யாண மண்டபத்தில், நாளை (ஆக.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் படித்த, படிக்காத, முன் அனுபவம் உள்ள மற்றும் இல்லாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைக்கான வயது 18–50 வயது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. போட்டோ, ரேசன் கார்டு, படிப்பு சான்று, ஆதார் கார்டு ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
நாமக்கல், + 2 அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில், கால்குலேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு மற்றும் நிர்வாகிகள், சென்னையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலாவை சந்தித்து பல்வேறு கோரிக்கை கொண்ட மனுவை அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் விடைபெற தயாராகியது.
Sorry, no posts matched your criteria.