India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி ஆட்சியாளர் அலுவலகத்தில், நீலகிரி குடிநீர் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் (மார்ச் 16) மாலை நடந்தது. கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு வரும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 15 துணைக் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ராஜா ராமன் பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துகிருஷ்ணன் மதுரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூருக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்து, வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.
சோளிங்கர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் ஆர்கே பேட்டை அடுத்த ராஜா நகரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு இரண்டு கிலோ மான் மாமிசம் விற்பனை செய்தார். தகவலின் பேரில் ஆற்காடு வனத்துறையினர் அர்ஜுனன், மதன்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். முன்னதாக சோளிங்கர் வட்டாட்சியர் தேவி முன்பாக இரண்டு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
சேலம் சரகத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கையின் போது அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 37 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 11 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 10 ஓட்டுநர்கள், சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 35 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 27 பேர் என 168 பேரின் லைசென்ஸ் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தருமபுரியில் வாட்ஸ்ஆப் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம், அதன் மூலம் உங்களுக்கு அசாதாரண சூழ்நிலை மற்றும் அச்சுறுத்தி பணம் பறிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட காவல் துறை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நேற்று X பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று மார்ச்.17 வெளியிட்ட அறிக்கையில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் விண்ணப்பம் செய்யலாம் எனவும் படிவம் 6- ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று(மார்ச்.17) காலை அய்யனூர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் மண் குவியலை கொட்டி பாதையை ஆக்கிரமித்ததாக கூறி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் செந்துறை அடுத்த இலங்கைச்சேரியை சேர்ந்த பவளக்கொடி என்பவர் கடந்த வியாழக்கிழமை(மார்ச்.14) அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. மருத்துவ செலவிற்கு அடமானம் வைக்க அவரது நகையை கேட்டதாகவும், தர மறுத்த பவளக்கொடியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. சரஸ்வதியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.