Tamilnadu

News March 17, 2024

மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் நேற்று (மார்ச் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியர் அலுவலக தரைதள நுழைவாயிலில் மனுக்கள் பெட்டியில் செலுத்துமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

நாடாளுமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் 21 பறக்கும் படையினர், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் தேர்தல் குறித்த புகார்களை தொலைபேசி மூலம் தெரிவிக்க 18004257088 ,27427412 &27427414 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News March 17, 2024

வாலாஜாபேட்டை: பூட்டி சீல் வைப்பு

image

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி இன்று(மாரச் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து வாலாஜாபேட்டை நகராட்சி சேர்மன் ஹரிணி தில்லையின் அறையை நகராட்சி பொறியாளர் சண்முகம் தலைமையில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்படும் வரை இந்த அறை பூட்டி வைக்கப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.

News March 17, 2024

தென்காசியில் 203 பேர் சிக்கினர்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று  தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 15 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்

News March 17, 2024

திருச்சி: தேர்தல் பணிக்காக 2118 காவலர்கள்.!

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.

News March 17, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

News March 17, 2024

பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

2024 ஆம் ஆண்டு தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது அவசரமான கோரிக்கை குறித்த மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பெட்டியில் போடுமாறு பொதுமக்களுக்கு ஆட்சியர் பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

News March 17, 2024

கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

image

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பைன்பாரஸ்ட் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News March 17, 2024

110 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மிட்னாங்குப்பம் பகுதியில் நேற்று (மார்ச்.16) சாராயம் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் சையத் அப்சல் ரோந்து பணியின் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த அருள் (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

சேலம்: இந்த எண்களில் புகார் அளிக்கலாம்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020, 0427-2450031,0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9489939699 என்ற வாட்ஸ்-ஆப் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என சேலம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!