India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்கால் அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை ஒரே வாரத்தில் கைது செய்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களை நேற்று இரவு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சார்ந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களை அனைத்து இடங்களிலும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா இன்று மங்கள வாத்தியம் முழங்க, பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜ், முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன் உட்பட பலர் செய்திருந்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
இன்று(16.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு துணை வாக்குச் சாவடிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா உடன் இருந்தனர்.
தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்ற அனைத்து உரிமதாரர்களும் , தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலனை (துப்பாக்கியை) அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாமல் உடனடியாக ஒப்படைக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10.54க்கு தொடங்கி, மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குன்னூர் அருகே கோட்டக்கல் செங்குன்ராயர் வனப்பகுதிக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் சுற்றுலா சென்றனர். ஒரு இடத்தில் தேனீக்கள் துரத்தியபோது எல்லோரும் ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அப்போது ஒருவர் மாயமானதால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இன்று (16/03/24) காலை மாயமான வாலிபரை ட்ரோன் கேமரா மூலம் தேடி கண்டுபிடித்து சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் சடலமாக மீட்டனர்.
இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில்
ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000-க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.