India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், குன்னாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருகின்றன. தேவாங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு உள்ள சூழலில் சாலை விபத்துகளில் இவை அடிக்கடி சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துரித உணவிற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28 துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இருபாலரும் கலந்துகொண்டு மத்திய அரசின் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்பு தொழில் மையத்தின் கீழ் லோன் வசதியும் பெற்றுக்கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மங்கம்மாபுரம் என்னும் சிங்கார கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 24) எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்கள் கே .பி முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி கே . அசோக் குமார் போன்றோர் தலைமை வகித்து விழாவை தொடங்க உள்ளனர். இதில் 101 பரிசுகளுக்கு மேல் வழங்கப்பட உள்ளன.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கண்மலர்-நடராஜ் மகன் விணுலோகேஸ்வரன் அதே பள்ளியில் பயிலும், 9 வகுப்பு வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தகாத முறைகளில் பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை: கடந்த 18.08.2025 அன்று எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் பிரசாரம் செய்தார். அப்பொழுது 108 ஆம்புலன்சில் நோயாளியை ஏற்ற சென்ற டிரைவர் சுரேந்திரனை எடப்பாடியார் கடுமையாக திட்டியுள்ளார். எனவே அவர் மீதும், டிரைவர் சுரேந்திரன் மற்றும் செல்போனை பறிக்க முயன்ற நபர்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத்திடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் புகார் கொடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவலர்கள் இரு பாதியாக பிரிக்கப்பட்டு முதல் பாதி விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக K. பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் முரளி, பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று தீவிர நாச வேலை தடுப்பு சோதனை நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், ரயில் நிலைய கேண்டீன், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.