India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் இன்று 16.02.2024- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் – பெரியார் பல்கலைக் கழக அளவிலான யோகாப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் அணிக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. யோகா வீராங்கனைகள் வீ. கார்த்திகா, வீ. கீர்த்தனா ஶ்ரீ, எம். மதுமிதா, ஏ. லீலாவதி, ஆர். கௌசல்யா மற்றும் ஆர் லாவண்யா ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.
பாவூர்சத்திரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் தலைமையில் கஷ்டம் ஹாட் இந்தியன் அகாடமி அமைப்பின் மூலம் இன்று வட்டார அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா, குங்பூ விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் சீனித்துரை ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய பெருந்தலைவருமான கே.பி.எஸ்.மணி என்பவரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து போலீசார் வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சோலார் தொப்பி மற்றும் சன் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி மற்றும் சன் கிளாஸ் வழங்கினார்.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே 1 முதல் துவங்குகின்றது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே.1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72 உதகை 643001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூட்டம் நடைபெறும்போது விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.