India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தல்-2024 தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை வழங்கிட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.
சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எஸ்.காரைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணிபுரியும் பிரிட்டோ என்பவர் அப்பள்ளியில் பயிலும் 4 மாணவியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்தும், அம்மாணவிகளிடம் ஒழுக்க கேடான செயலில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று தலைமை ஆசிரியர் அ.பிரிட்டோவை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் விஜயராகவன், ராஜேந்திரன் முரளி, வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதி பாலகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சுமார் 40 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி கட்டிடங்களை அகற்றும் பணியினை மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த.சோழராஜன் இன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகராட்சி பொறியாளர், கட்டிட மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி, கண்ணமங்கலம் கூட்ரோடு மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு உழவர் ஆலோசனை மையக் கட்டடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று திறந்து வைத்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்த கூட்டம் இன்று(மார்ச் 16) கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர், தனி மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.
காரைக்கால் அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை ஒரே வாரத்தில் கைது செய்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களை நேற்று இரவு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சார்ந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களை அனைத்து இடங்களிலும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தி.மலை மாவட்டத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். மாவட்ட முழுவதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.