Tamilnadu

News March 17, 2024

முதல்வருக்கு அமைச்சர் நன்றி

image

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நே‌ரி‌ல் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இ‌தி‌ல் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 17, 2024

நாட்றம்பள்ளியில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு கட்சி கொடிக் கம்பங்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்  நேற்று இரவு பேருந்து நிலையத்தில் இருந்த அதிமுக,திமுக,பாஜக உள்ளிட்ட கட்சி கொடிக் கம்பங்களை வருவாய் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 17, 2024

கடலூரில் ஊடக சான்றிதழ் மற்றும் கட்டுப்பாட்டு அறை

image

பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு (MCMC) கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம்,
மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்ளனர்.

News March 16, 2024

கடலூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

image

கடலூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.

News March 16, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட்

image

திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

செங்கல்பட்டு :இந்தியா கூட்டணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

image

செங்கல்பட்டு பல்லாவரம் சுரபி மகாலில் நடைபெற்ற I N D I A கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, க.செல்வம் எம்.பி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News March 16, 2024

நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா பெறலாம்!

image

சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வட்டம், சேலம் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இணையதளம் வழியாக பட்டாவிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று‌ தெரிவித்துள்ளார்.‌ மக்கள் பத்திர பதிவு ஆவணங்களை கொண்டு நகர நிலவரித்திட்ட அலகு 1,2,3 மற்றும் 4ல் தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

அதிரடியாக 38 சாராய வியாபாரிகள் கைது

image

நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீசார் இன்று அதிரடியாக சாராய வேட்டை நடத்தினார். இதில், 38 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2540 லிட்டர் பாண்டி சாராயம் 90 மில்லி அளவுள்ள 50 மதுபாட்டில்கள் 180 மில்லி அளவுள்ள 105 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இத்தகவலை போலீஸ் சூப்ரண்ட் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

ஆட்சியரகத்தில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!