India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம். மேலும், 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச எண் 15100 என்பதை அழைக்கலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்வாலண்டினா அறிவுறுத்தியுள்ளார். SHARE IT..
பெரம்பலூர் மாவட்டத்தில் ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை 1600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் வம்சம் வந்த தூங்கானை மறவன் அரசன் கட்டியது. இவருக்கு பின் பல அரசர்கள் இக்கோட்டையில் இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் இந்த கோட்டையை ஆற்காடு நவாப் கைப்பற்றினார். 1751-ல் வால்கண்டா போரில் இறந்தவர்கள் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டனர். இப்படி பல மன்னர்களை கண்ட கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
தமிழக அரசு சார்பில், தென்காசி மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு ஃபோர்க்லிப்ட் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படுகிறது. 18-35 வயது வரை உள்ள இளைஞர்கள் பயிற்சிக்கு<
நீங்கள் பயந்தால் அதை நாய்களால் உணர முடியும். எனவே பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். நாய் உங்களை நோக்கி வந்தால் அதை திசை திருப்ப உங்கள் கையில் இருக்கும் பொருளை கீழே தூக்கி வீசலாம் அல்லது கீழே குனிந்து கல் எடுப்பது போல பாவனை செய்யலாம். பைக்கில் போனால் நாயை கண்டதும் வேகமாக முறுக்க கூடாது. முக்கியமாக நாய் மீது எதையும் தூக்கி வீச கூடாது. இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஷேர் பண்ணுங்க!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இதனால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*
சேலம் மாவட்டத்தில் (ஆக.23) இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️காலை 9 மணி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நலத்திட்ட பணிகள் துவக்கம் சுற்றுலாத் துறை அமைச்சர்.
▶️காலை 10 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாவட்ட மாநாடு துவக்கம் குஜராத்தி திருமண மண்டபம் ஐந்து ரோடு.
▶️ காலை 10:30 ராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ராமகிருஷ்ண மடம்.
புதுவை என அழைக்கப்படும் புதுச்சேரி, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே கேரளா மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 20வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் ‘பிரேயர் கோப்பை’ யினை சென்னையில் நடத்தியது. இதில் இறுதிப்போட்டியில் ஆரஞ்சு டிராகன்ஸ் மற்றும் கிரீன் இன்வேடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ஆரஞ்சு டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டிராகன்ஸ் அணியில் நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியின் மாணவி ஶ்ரீநிதி அற்புதமாக விளையாடி சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை பெற்றார்.
▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1990
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 4
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 12,14,997
▶️ ஆன்மிகம் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் போனது சிவகங்கை
▶️ இங்குள்ள செட்டிநாடு உணவுகள் தனித்தன்மை வாய்ந்தவை
நம்ம மாவட்டம் பத்தின இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
தேனி மாவட்ட அரசு மருத்துவமனை எண்கள்
▶️பெரியகுளம் – 04546 231292, 9443804300
▶️ஆண்டிப்பட்டி – 04546 242600, 9443927656
▶️போடிநாயக்கனூர் – 04546 280332, 9443328375
▶️உத்தமபாளையம் – 04554 265243, 9894840333
▶️சின்னமனூர் – 04554 246686, 9442273910
▶️கம்பம் – 04554 271202, 9443293419
(தேவைக்கு மட்டும் அழைக்கவும் )
இந்த எண்களை அனைவருக்கும் SHARE செய்ங்க.
Sorry, no posts matched your criteria.