India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான
மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருவது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பரமக்குடியில் 2,52,642, திருவாடானையில் 2, 92, 214 , ராமநாதபுரத்தில் 3, 14, 236 , முதுகுளத்தூரில் 3,09, 928, அறந்தாங்கியில் 2,27,059, திருச்சுழியில் 2, 09, 971 என 7, 97, 012 ஆண்கள், 8, 08, 955 பெண்கள் என 16, 06, 050 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 54 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஒளிப்பதிவாளர், 5 அலுவலர்கள் கொண்டு 3 சுற்றுகளாக பறக்கும் படை செயல்படும் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் முதல் சிறப்பு கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மாநகராட்சி தலைவர் கலாநிதி துணைத் தலைவர் பூபதி நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் மூப்பனாரின் சிலை உள்ளது. இன்று மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூப்பனாரின் சிலை துணி கொண்டு மூடப்பட்டது. மேலும் பல இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று(மார்ச்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.இதற்கு ஆதார் நகல் , குடும்ப புகைப்படத்துடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.
புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாட திட்டம் அமுல் படுத்துவதால் மாணவர் சேர்க்கை வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது நடைபெறும் தேர்வுகள் முடிந்ததும், மார்ச்.24 முதல் 31 ஆம் தேதி வரையிலும், மே.01 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 03ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.