Tamilnadu

News April 18, 2024

மதுரை – ஓஹா ரயில் சேவை நீட்டிப்பு!

image

குஜராத் மாநில தலைநகர் அஹமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை – ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520) மே 6 முதல் ஜுன் 24 வரை இயக்கப்படும் என மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

News April 18, 2024

மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள்-ஆட்சியர்

image

மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெற மதுரை மக்கள் தேவையான ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 18, 2024

சென்னையில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: பெண் பலி

image

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (எ)காளியம்மாள்( 35) இவர் இன்று அல்லியப்பன் தாங்கல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். நாகாலம்மன் நகர் அருகில் வரும்போது நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி லட்சுமி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 18, 2024

காஞ்சிபுரம்: பேருந்துக்காக அலைமோதிய கூட்டம்

image

நாளை (ஏப்ரல் 19 ) நாடாளுமன்ற தேர்தல் 2024 மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள், அலுவலகத்தில் பணிபுரிவோர், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தனர்.

News April 18, 2024

மயிலாடுதுறையில் 195 நபர்கள் மீது குற்றத்தடுப்பு

image

மயிலாடுதுறையில் பிரச்சனைக்குரிய நபர்கள் , ரவுடிகள் கண்டறியப்பட்டு 195 நபர்கள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 21 காவல் ஆய்வாளர்கள் , 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 18, 2024

சென்னையில் நாளை 20 ஆயிரம் போலிசார்

image

சென்னையில், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் ஆணையர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர். லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன.

News April 18, 2024

புதுகையில் இந்த நாள் விடுமுறை

image

புதுகை மகாவீர் ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள், மதுபான உரிமை கடைகள், பார்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது இந்த நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க நாளை இலவச பேருந்து

image

மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறியிருப்பதாவது, நாளை ஓட்டுப்பதிவு அன்று 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட ஏதுவாக மதுரையில் அரசு நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

முதியவரை காப்பாற்றிய தலைமை காவலர்

image

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு ஏதுமின்றி சாலையோரம் முதியவர் ஒருவர் படுத்து கிடந்துள்ளார். மயிலம் காவல் நிலைய தலைமை காவலர் சங்கரன், அவருக்கு தேவையான உணவுகளை வாங்கி கொடுத்து தனது சொந்த செலவில் இன்று சொந்த ஊரான ஆத்தூர் அடுத்த சிறுவாச்சூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!