Tamilnadu

News April 18, 2024

விருதுநகர் மக்களே நாளை இதை செய்யுங்கள்

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது ஏதேனும் குறைகளோ அல்லது புகார் இருந்தால், அது குறித்து 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

News April 18, 2024

தேனி: 6 வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி

image

தேனி மாவட்டத்தில் நாளை (ஏப்.19) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வெள்ளிமலையில் ஆறு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள துரைச்சாமி மரகதம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி செயல்படுகிறது. அந்த ஆறு வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 பேரும், அவர்களுடன் போலீசாரும் பணியாற்ற உள்ளனர்.

News April 18, 2024

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாகன வசதி

image

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் சக் ஷம் செயலி அல்லது 1950 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாக்களிக்க செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

கோவையில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற CODE -ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

தேர்தல் நேரத்தில் மின்தடையா?

image

பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள  வாக்குச்சாவடிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்   தேர்தல் நடக்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டி போன்  நம்பர் பதிவு செய்யப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.

News April 18, 2024

திருச்சியில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

நாமக்கல்: தேர்தல் பணியில் 2700 காவலர்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏதுவாக 2, 786 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உ.மா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

புதுகை: வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

image

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News April 18, 2024

நாமக்கல்: கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

image

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹெர்குல் ஜித் கவுர் முன்னிலையில் இன்று  நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 18, 2024

மத்திய சென்னை தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட

error: Content is protected !!