India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவு தொடர்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளும் பணிகளை அம்மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்பு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை நகரில் இன்று 100.40 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மதிய நேரத்தில் கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒருசிலர் குடை பிடித்துச் சென்றனர். மயிலாடுதுறையை சேர்த்து தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியது குறிப்பிடத்தக்கது.
கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக குறிஞ்சி எனும் தலைப்பில் கோடை கால முகாம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முகாம் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், அறிவியல், கலை, மற்றும் சமுக அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள பல்வேறு சந்தேகங்களைத் புரிய வைக்கும் நிகழ்ச்சியாக நடைபெறும் என இன்று கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்த இலகுவாக இலவசமாக அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையினை “Saksham App” உதவி எண் 1950 கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் மூலமாக தொடர்பு கொண்டு நாகையில் நூறு சதவீத வாக்கு பெற வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் சுமார் 15 லட்சம் பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 5500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் சுற்றி பார்க்க இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் மஹாலை பார்த்து ரசித்தனர். மேலும் நாளை தேர்தல் என்பதால் மஹாலில் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான சோதனை சாவடிகள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மார்ச் 18 முதல் இன்று வரை ரூ.1,59,60,515 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் சமர்ப்பித்ததின் பேரில் ரூ.1,52,08,330 திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 7,52,185 கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கர நாற்காலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கின்ற நிலையில் வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. இதனை அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கு இயந்திரங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.