Tamilnadu

News April 19, 2024

கிருஷ்ணகிரி கலெக்டர் வாக்களிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பையம்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கை கணவர் நினேஷ் மற்றும் குடும்பத்துடன் பதிவு செய்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பையனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் வாக்கினை பதிவு செய்தார். அப்போது இந்த வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு வாக்கு மையத்திலும் ஆய்வு செய்துவருகிறார்.

News April 19, 2024

விருதுநகர்: ஜனநாயக கடமையாற்றிய கலெக்டர்

image

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட
ஆட்சித்தலைவருமான வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூரைக்குண்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று(19.04.2024) தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News April 19, 2024

குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலை முயற்சி

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் வைத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

News April 19, 2024

காட்டுமன்னார்கோவிலில் ஓட்டு போட்ட அமைச்சர்

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடக்கிறது. முன்னதாக 6 மணி முதல் 7 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

News April 19, 2024

வேலூர் அருகே வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு

image

வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி காந்தி நகர் பகுதியில் டான் பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 154வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்கை செலுத்தவந்த வாக்காளர்கள் வாக்கை செலுத்த முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

News April 19, 2024

சங்கரன்கோவிலில் வாக்கு செலுத்திய துரை வைகோ

image

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தனது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். மதிமுக தலைமை நிலைய செயலாளரும் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை.வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 19, 2024

உணவுத்துறை அமைச்சர் வாக்குப்பதிவு

image

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தயம் சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் இன்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவரது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தார்.

News April 19, 2024

முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்த சபாநாயகர்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்தினருடன் ராதாபுரம் லெப்பை குடியிருப்பு அருகே உள்ள பெரிய நாயகிபுரம் ADH அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

News April 19, 2024

ராமநாதபுரம்: நவாஸ் கனி எம்பி வாக்களிப்பு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி என 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,934 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, கடலாடி ஊராட்சி ஒன்றிய குருவாடி துவக்கப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 19, 2024

பதற்றம் அடைய வேண்டாம் – ராணிப்பேட்டை கலெக்டர்

image

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பதற்றமின்றி பணியாற்ற வேண்டும்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது; வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் சிறு சிறு கோளாறுகள், பிரச்னைகள் இருந்தால் அச்சம் அடைய வேண்டாம்; உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர் குழு மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!