Tamilnadu

News April 19, 2024

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபட் ப்ரூஸ் ஆய்வு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒய்.எம்.சி.ஏ ஹோமில் இன்று (ஏப். 19) காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News April 19, 2024

சத்குரு ஜக்கி வாசுதேவ் வாக்குப்பதிவு

image

கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

News April 19, 2024

புதுவை: பாகூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு

image

புதுவை பாகூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ‘பிங்க் பூத்’ என்ற பெயரில் பெண் அதிகாரிகளை கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த வாக்கு சாவடியின் நுழைவு வாயில் மற்றும் உள்ளே பிங்க் மற்றும் வெள்ளை நிற காகிதத்தால் ஆன தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த பாகூர் இந்திய கம்யூ. கட்சி எதிர்ப்பு தெரிவித்து கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் துறையினர் அதனை அப்புறப்படுத்தினர்.

News April 19, 2024

நாகை: பழுதான வாக்குப்பதிவு இயந்திரம்

image

நாகை டாட்டாநகர் வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் மீனவர்கள் வாக்களிக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வாக்கு சாவடியில் பதட்டமான சூழலில் நிலவி வருகிறது.

News April 19, 2024

நடிகர் சசிகுமார் சொந்த ஊரில் வாக்களித்தார்

image

மக்களவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் காலை 7 மணியளவில் ஒத்தக்கடை அருகிலுள்ள புதுதாமரைப்பட்டி வாக்குச் சாவடிக்கு வந்தார். பின்னர் சுமார் 7.15 மணி அளவில் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

News April 19, 2024

காஞ்சிபுரம்: வரிசையில் நின்று வாக்களித்த கலெக்டர்

image

காஞ்சிபுரம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் இன்று மக்களவைத் தேர்தலை ஒட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

News April 19, 2024

குமரி: விஜய் வசந்த் எம்பி வாக்களித்தார்

image

குமரி மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக  தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காலை முதலே வாக்களிக்க ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங். வேட்பாளரான விஜய் வசந்த் எம் பி. இன்று காலை அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

News April 19, 2024

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த மதுரை மாணவி

image

சிவில் சர்வீஸஸ் தேர்வில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த லிந்தியா, முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 354வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர், “பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முடித்து கன்சல்டன்டாக வேலை செய்தேன். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேலையை விட்டேன். அப்பா, அம்மா, அண்ணன் ஊக்குவிப்பால் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

News April 19, 2024

வாக்கு செலுத்திய ராணிப்பேட்டை கலெக்டர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வளர்மதி ராணிப்பேட்டை காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு செய்துள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்; 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

News April 19, 2024

நீலகிரி: 47 ஓட்டு சாவடியில் யானைகள்

image

கூடலூர், வன பகுதியை ஒட்டிய, 47 ஓட்டு சாவடிகளில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. வாக்காளர்களுக்கு யானைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்பணியில் ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார், பறக்கும் படை வனச்சரகர் இலியாஸ் மீரான், வனவர் சுபத் குமார் மற்ற உள்பட வன ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!