India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி 250வது பூத்தில், இன்று அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற 77 மூதாட்டி வாக்கு செலுத்த வந்துள்ளார். அப்போது, உள்ளே நுழைந்து வாக்கு செலுத்த முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி 6வது கோட்டம் சின்ன கொல்லப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை சேலம் மாநகராட்சி மேயரும், அஸ்தம்பட்டி பகுதி செயலாளருமான ஆ.இராமச்சந்திரன் வாக்குப்பதிவு செய்தார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து புதுகை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும்படை, நிலையான மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலுக்கு வாக்களிக்க, சுகுணாபுரம் பகுதியில் வசித்து வரும் 102 வயது மூதாட்டி முத்தாயம்மாள் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் உதவியுடன் வீல் சேரில் வந்து வாக்களித்தார். இதை பற்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாவது, வாக்களிப்பது என்னுடை உரிமை என்று மூதாட்டி கூறியதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசைகள் நின்று வாக்களித்தார்.
மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும், நாட்டை காக்க வேண்டும் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் நடிகர் யோகி பாபு தனது மனைவியுடன் வந்து வாக்கை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் வாக்களிப்பது முக்கியம். ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை பொதுத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் – 2024, வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, சம்பத்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வரிசையில் நின்று வாக்களித்தார்.
கள்ளிமந்தத்தில் அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்த வருகை தந்தார். காலையில் வாக்கு சாவடிக்கு மனைவி மற்றும் மகள்களுடன் அமைச்சர் சக்கரபாணி வருகை தந்தார். அமைச்சர் குடும்பத்தினர் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி விட்டுச் சென்றனர்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இன்று (ஏப்ரல். 19)கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அனைத்து குடிமகன்களும் தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
Sorry, no posts matched your criteria.