India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராமங்களில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. ஏகனாம்புரம் கிராமத்தில் 9 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 வாக்குகளையும் அரசு அலுவலர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். நாகப்பட்டு கிராமத்தில் இதுவரை ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 7: 00 மணி முதல் 9 மணி வரை 10.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுபலட்சுமி இன்று (ஏப்ரல் 19)தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து வாக்கு பதிவுகள் நடந்து வருவதாகவும் அடுத்த கட்டமாக 11 மணிக்கு இரண்டாம் கட்ட நிலவரத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (ஏப்ரல் 19) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் தொரப்பாடி எழில் நகரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்
வி.எஸ்.மாதேஸ்வரன்
பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து செலுத்தினார். வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் காலை 9:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 11.23%, உசிலம்பட்டி 5%, ஆண்டிபட்டி 8%, பெரியகுளம் 9.8%, போடிநாயக்கனூர் 16%, கம்பம் 2.19% என மொத்தமாக 8.59% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் செல்போனை கொண்டு செல்லக் கூடாது என காவலர்கள் கூறியதால், வாக்காளர்கள் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளனர். வாக்களிக்கும் பொதுமக்கள் வாக்குச்சாவடி உள்ளே தொலைபேசி எடுத்து செல்ல வேண்டாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மீறுவோர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 142 அடி வரை நீர்த்தேக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் அணையின் தற்போதைய நீர்மட்டம் 115. 25 ஆக உள்ளது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போதைய நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. ஐந்து மாவட்டங்கள் இதன் மூலமாகத்தான் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.
இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்தியாயினி ஜனநாயக கடமையாற்ற இன்று அவரது தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்பு வாக்களித்த தனது விரல்களை காண்பித்த அவர், ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன் என்று செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்.
நாகை, கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வாக்காளர்களை கவர அசத்தல் ஏற்பாடுகளை செய்து, பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வாக்குச்சாவடியா அல்லது திருமண மண்டபமா என வியக்கும் வகையில் அலங்கார வளைவுகளுடன் சீனி, சந்தனம் வழங்கி வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஊழியர்களை அமர்த்தி இருந்தது வாக்காளர்களை கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற வரும் நிலையில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமலிங்கம் பட்டியில் இன்று (19.04.2025-) 102 வயதான சின்னம்மாள் என்பவர் வயதான காலத்திலும் கூன் விழுந்த நிலையிலும் ஜனநாயக கடமையாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். இவரது ஜனநாயக கடமையை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.