Tamilnadu

News April 19, 2024

தேர்தலை புறக்கணித்த 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்

image

சேத்துப்பட்டு அடுத்த மருத்துவாம்பாடி ஆதிதிராவிடர் பகுதியில் சாலை வசதி, சுடுகாட்டு பாதை என அடிப்படை வசதி செய்தி தராததை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை.

News April 19, 2024

திண்டுக்கல்: கருப்பு கொடிகட்டி தேர்தல் புறக்கணிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு சின்ன அயன்குளம் பகுதியில் குடிநீர், சாக்கடை கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், வாக்களிக்க செல்ல போவதில்லை எனக்கூறி கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 10 வார்டு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 19, 2024

தேர்தலை புறக்கணித்த மக்கள்! போராடும் அலுவலர்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் பகுதி மக்கள், பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதை தொடர்ந்து, தேர்தலை புறக்கணித்த மக்களிடம் வீடு வீடாக சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 19, 2024

தேர்தல் புறக்கணிப்பு பேச்சுவார்த்தை தோல்வி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி வாக்கு சாவடியில் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். அதனையொட்டி தாசில்தார் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

News April 19, 2024

திருவள்ளூரில் வாக்களிக்கச் சென்றவர் மரணம்

image

மக்களவைத் தேர்தல் 2024 முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனராஜ் என்பவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

News April 19, 2024

கரூர் தொகுதி: 11 மணி நிலவரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் கரூர் தொகுதியில் மட்டும் 28.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2024

2ஆவது முறையாக இயந்திரம் கோளாறு

image

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

News April 19, 2024

சிவகங்கை தொகுதி: 12 மணி நிலவரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம், காரைக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மதியம் 12 மணி நிலவரப்படி 24.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 19, 2024

இயந்திர பழுது காரணமாக காத்திருந்த மக்கள்

image

திருச்சி கிராப்பட்டி தனியார் பள்ளியில் வாக்கு சாவடி எண் 212ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது வாக்கினை செலுத்தினர். அருகில் உள்ள 214, 215வது வாக்கு சாவடியில் இயந்திர பழுது காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள் என தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

News April 19, 2024

தேனி மக்களவைத் தொகுதி 25.75% வாக்குப்பதிவு

image

தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரம் படி சோழவந்தான் 27.98% உசிலம்பட்டி 26.61% ஆண்டிபட்டி 20.71% பெரியகுளம் 25.10% போடிநாயக்கனூர் 28.73% கம்பம் 25.85% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!