India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் பணிக்காக வந்த 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை, குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்த வருகை தந்தார். காலையில் வாக்கு சாவடிக்கு மனைவி மற்றும் மகன்களுடன் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வருகை தந்தார். பின்னர் மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி விட்டுச் சென்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற வரும் நிலையில் மதுரையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிடும் சு.வெங்கடேசன், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தி விரலில் மை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி ஊராட்சியில் (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளங்கம்பாடியில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்றது. 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. ஒன்று அல்லது இரண்டு நபர்கள் அவ்வப்போது வாக்களிக்க வந்தனர்.
மக்களவை பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை தருமபுரி எஸ்வி ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்முறை ஓட்டுபோட வந்த பெண் ஒருவருக்கு டிஆர்ஓ பால் பிரின்சிலி ராஜ்குமார் பரிவட்டம் கட்டி வரவேற்றார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் திருவாரூரை உள்ளடக்கிய நாகை தொகுதியில் மட்டும் 24.92% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு இன்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மாவட்ட முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவை இன்று மூடி கிடந்தன. இதனால் பல வணிக நிறுவன சாலைகள் “பந்த்” போல் வெறிச்சோடி காணப்பட்டது, வாக்களிப்பவர்கள் நடமாட்டம் மட்டும் இருந்தது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. 11 மணி நிலவரப்படி 21.69% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
நாமக்கல், பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் தொடக்கப் பள்ளியில் உள்ள பூத் எண் 226-ல் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது குடும்பத்துடன் இன்று வந்து வாக்களித்தார். மேலும் காலை முதலே பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது, மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில், 9 மணி நிலவரப்படி, 12.88 சதவீதம் ஓட்டு பதிவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.