Tamilnadu

News April 27, 2024

புதுச்சேரி சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்

image

வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

image

முக்கிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.1ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார் .

News April 27, 2024

கள்ளக்குறிச்சி மேல்நாரியப்பனூர் தேவாலயம் சிறப்புகள்

image

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. ஆண்டுதோறும் புனித அந்தோணியாரின் வாழ்க்கை மற்றும் பணியை போற்றும் வகையில் ஜூன் மாதத்தில் 9 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த தலத்தில் அனைத்து மதத்தினரும் வழிபடுவது சிறப்பான ஒன்றாகும்.

News April 27, 2024

ட்ரோன்கள் பறக்க தடை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரக்கோணம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா AAA கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மையத்திலிருந்து சுமார் 3கி மீ சுற்றளவு வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாக்கு எண்ணும் நாட்கள் (04.06.2024) வரை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News April 27, 2024

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வரும் ஏப்ரல் 29/4/2024 முதல் 13/5/2024 வரை நடைபெறவுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 18-வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விளையாட்டு அரங்கில் நுழைவு கட்டணமாக ரூ:200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 7401703516 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 27, 2024

“ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை”

image

சர்.பிட்டி தியாகராயர் 173வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. சென்னையில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும் என்றார்.

News April 27, 2024

திருப்பத்தூர்: கோடைகால பயிற்சி

image

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் தடகளம், கபடி,கூடைபந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து என 5 போட்டிகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது. ரூ.200 கட்டணம் செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 27, 2024

ஈரோடு பண்ணாரியம்மன் கோயில் சிறப்புகள்!

image

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்னும் ஊரில் ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்றி வனமாக இருக்கும் இப்பகுதியின் நடுவின் பெரிய அரண்மனை போன்று காட்சியளிக்கிறது இக்கோவில். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் வரலாறாக செவிவழிச் செய்தியாக கதைகள் கூறப்படுகின்றன. அழகிய கோபுரத்துடனும், அர்த்த, மகா, சோபன மண்டபத்துடன் இக்கோவில் உள்ளது.

News April 27, 2024

கொடைக்கானல்: 7 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிப்பு

image

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும் சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்துள்ளது. இதனால் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறை மேடு, அப்சர்வேட்டரி, சென்பகணூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக 100- க்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து சென்றன. 

error: Content is protected !!