Tamilnadu

News April 22, 2024

கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை

image

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் லத்திகா (18), இவர் ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் முத்துலெட்சுமி அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 22, 2024

மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்: எம்எல்ஏ ஆய்வு

image

பழவேற்காடு, கோட்டைக்குப்பத்தில் 82 பேரின் மீன் வலைகள் நேற்று முன் தினம் இரவு மர்மமான முறையில் எரிந்துள்ள நிலையில் அப்பகுதிக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று எரிந்த மீன்வலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

News April 22, 2024

லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

image

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 22, 2024

குமரி: 3,000 அடி உயரத்தில் லட்சார்ச்சனை

image

குமரி மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ள ஆறுகாணி காளிமலை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனை நேற்று(ஏப்.21) நடைபெற்றது. இந்து கோயில் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற லட்சார்ச்சனையில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாமம் சொல்லி குங்குமத்தால் லட்சார்ச்சனை செய்தனர்.

News April 22, 2024

வேலூர் அருகே பள்ளி மாணவன் மாயம்

image

குடியாத்தம் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். தேர்தல் அன்று அவரது தாயார் ஓட்டுப்போடுவதற்காக சென்றிருந்தார். வீட்டில் மாணவர் மட்டும் தனியாக இருந்தார். தாயார் ஓட்டுப்போட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மாணவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

News April 22, 2024

வேப்பந்தட்டை: மதுரை வீரன் சுவாமி கும்பாபிஷேகம்

image

வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் நேற்று(ஏப்.21) புதிதாக கட்டப்பட்ட மதுரை வீரன் சுவாமி திருக்கோயிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகளுடன் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மலேசிய தொழிலதிபர் பிரகதீஷ் குமார் கலந்து கொண்டனர். சுற்றுவட்டார கிராமத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

News April 22, 2024

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணி

image

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.மேலும், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

News April 22, 2024

இலுப்பூர் பொன்வாசிநாதர் தேர்த்திருவிழா!

image

புதுகை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமனான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து நிலையை அடைந்தது.

News April 22, 2024

திருச்சி அருகே முன் விரோதத்தில் ஒருவர் அடித்து கொலை

image

லால்குடி அருகே நன்னிமங்கலத்தை சேர்ந்த அருண்ராஜ் (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த தயாளன் (43)  என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளன் அவரது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 22, 2024

நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால்,நாமக்கல் சுற்றுவட்டார கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!