Tamilnadu

News April 24, 2024

நெல்லை – தூத்துக்குடி பஸ் சர்வீஸ் குறைப்பு

image

திருநெல்வேலி தூத்துக்குடி இடையே 1 -1 பஸ் சர்வீஸ் இயக்கப்படுகிறது. இடைவெளிகளில் நிற்காமல் செல்லும் இந்த பஸ்சிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த பஸ் சர்வீஸ் எண்ணிக்கையை தற்போது வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் இதில் பயணிப்பவர்கள் இடமின்றி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

News April 24, 2024

மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

image

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (82) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப். 7 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த அவருக்கு சிறை மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின், மேல் சிகிச்சைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.

News April 24, 2024

பழனி மின்சாரத்துறைக்கு குவியும் கண்டனங்கள்

image

பழனி அடுத்த பாப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மிகக் குறைவாக வழங்கப்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மின்சார வாரிய அலட்சியப் போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குற்றம் சாட்சி வருகின்றனர்..

News April 24, 2024

சித்திரை மாத தேரோட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 7ம் நாள் உற்சவமும் தேர் வீதியுலா இன்று (ஏப்ரல்-23) தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் செங்கல்பட்டு மட்டும் இல்லாமல் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

News April 24, 2024

தருமபுரி: மாமியார் வீட்டை சேதப்படுத்திய போலீஸ்

image

தருமபுரி மாவட்டம் கோலம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார்(40) அசாமில் போலீசாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஏப்.22) மாமனார் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாமியாருடன் சண்டையிட்டு வீட்டை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

தென்காசி -பாலருவி ரயில் திடீர் ரத்து

image

திருநெல்வேலியில் இருந்து தென்காசி புனலூர் வழியாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று (ஏப்ரல் 22) இரு மார்க்கத்திலும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுபோல் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்பட வேண்டிய பாலருவி ரயிலும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது. திடீர் ரத்து காரணமாக இந்த ரயிலை எதிர்பார்த்த பயணிகள் அவதி அடைந்தனர்.

News April 24, 2024

தந்தி மாரியம்மன் புலி வாகன உற்சவம்: பக்தர்கள் உற்சாகம்

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 3 வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.22) கிருஷ்ணாபுரம் பொதுமக்களின் சார்பாக அம்மனின் புலி வாகன உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஆடல், பாடல், அன்னதானம், அம்மன் அலங்கார ஊர்வலம், சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News April 24, 2024

சித்ரகுப்தர் கோயிலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

image

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில், இன்று(ஏப்.23) உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் டி.ராஜு சாமி தரிசனம் செய்தார். அவரை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் வான்மதி வரவேற்றார். அவருடன் வழக்கறிஞர்கள் தியாகராஜன், ரகுராமன், சம்பத், ஆறுமுகம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

News April 24, 2024

திருப்பத்தூர்: ஆண் சடலம் கண்டெடுப்பு

image

ஆம்பூர் சான்றோர்குப்பம் அடுத்த வண்ணான்துறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நகர போலிசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து; மரணம் 

image

சென்னையை சேர்ந்த ராஜாமணி. இவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் திருப்பத்தூரில் இருந்து நேற்று காலை சென்னைக்கு சென்றபோது புதுக்கோட்டை சிப்காட் அருகே சாலையை கடக்க முயன்ற பெண்மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் தனிஷ்சாய் என்ற 2 வயது குழந்தை பலியானது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தார்.

error: Content is protected !!