Tamilnadu

News April 24, 2024

வேலூரில் தொடரும் பறக்கும்படை சோதனை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி வேலூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

தஞ்சை: தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே ஒருவர் கொலை வெறி தாக்குதல் நடத்த உள்ளதாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் சத்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரை நேற்று(ஏப்.22) போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

News April 24, 2024

கிருஷ்ணகிரியில் தொடரும் பறக்கும்படை சோதனை

image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

சென்னை மெட்ரோ: பார்க்கிங் கட்டணம் உயர்கிறது

image

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமான பயணிகளுக்கு வாகன நிறுத்துமிட வசதி வழங்கும் வகையில், வழக்கமான பயணிகள் அல்லாதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது. பயணிகள் தங்கள் வீடுகளில் இருந்து டூவீலர்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளில் செல்கின்றனர்.

News April 24, 2024

பெரம்பலூர் அருகே நல்லேறு திருவிழா!

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நல்லேறு திருவிழா இன்று(ஏப்.23) நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க இயற்கையை வணங்கி வளர்ப்பு காளைகளுடன் பொன் ஏர் பூட்டி உழவுப் பணியை பாரம்பரிய முறைப்படி மேற்கொண்டனர். இதில் திரளாக கலந்து கொண்டாடினர்.

News April 24, 2024

திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 24, 2024

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புகழ்பெற்ற சாரங்கபாணி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 14ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை பல்லக்கிலும் மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா, சாரங்கா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

News April 24, 2024

 கொள்ளையடிக்க திட்டமிட் 8 பேர் கைது

image

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கட்றாபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் சித்திரை திருவிழாவில் பெண்களிடம் நகைகளை கொள்ளை அடிக்க வேண்டும் என ஹிந்தியில் பேசி கொண்டிருந்ததை விடுதி மேலாளர் முரளி கவனித்து, போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் 6 பெண்கள் உட்பட 8 பேரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து திருடுவதற்கு தேவையான சிறிய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

News April 24, 2024

கிருஷ்ணகிரியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 2023-2024ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 22) துவக்கிவைத்தார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!