Tamilnadu

News April 24, 2024

மயிலாடுதுறையில் சிசிடிவி அமைத்த நகர்மன்ற உறுப்பினர்

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் பனந்தோப்பு தெரு , இந்திரா நகர் , முருகன் நகர் மற்றும் செல்வவிநாயகர் நகர் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கேமரா இன்று பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா. ரஜினி தனது சொந்த செலவில் சிசிடிவி அமைத்துக் கொடுத்தது பலதரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

News April 24, 2024

சுகாதாரமற்ற நிலையில் பேருந்து நிலையம்

image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிகின்றனர். பேருந்து நிலையத்தில் குப்பைகள் போடும் இடமானது பேருந்து நிலைய நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் சுகாதரமற்ற நிலையில் உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். 

News April 24, 2024

திருச்சி: போலீசிடம் தகராறு.. இளைஞர் மீது வழக்கு

image

திருச்சி, பாலக்கரை ஸ்பெஷல் போலீசாக பணியாற்றி வருபவர் அஜ்மல் கான். நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,  கீழப்புதூர் பகுதியை சேர்ந்த பிரசாத்(25) என்பவர் போலீசிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து அஜ்மல்கான், பாலக்கரை
போலீஸ் ஸ்டேஷனில், புகார் செய்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

தென்காசி அருகே சோதனைச்சாவடியில் ஆய்வு

image

கேரள மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து இன்று காலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் பணிகளை நேரில் சென்று அதிரடி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்ப வேண்டும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

News April 24, 2024

புதுகை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அன்னதானம் 

image

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கீழ 5ம் வீதி மரக்கடை வீதியில் அருள்பாளித்து வரும் ஸ்ரீ நல்ல வீரப்பசுவாமி, முப்பலி கருப்பர் கோவிலில் 16ம் ஆண்டு அன்னதான விழாவினை மாநகராட்சி துணை மேயர் மு.லியாகத் அலி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு ஒப்பந்ததாரர் விஜய் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: சிலம்ப பயிற்சி முகாம் 

image

தமிழர்களின் பாரம்பரிய கலையான, சிலம்பக்கலையை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் பள்ளி மைதானத்தில் இன்று முதல் தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரை மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

News April 24, 2024

அணைக்கட்டு: சந்தையில் ரூ.80 லட்சம் வர்த்தகம்

image

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை  மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

News April 24, 2024

கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்

image

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி படகுகளை இழக்கும் அவல நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கடலோரப் பகுதிகளில் கூண்டு வலையில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாம்பன், குந்துகால், மண்டபம் தோணித்துறை, ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் சில மீனவர்கள் கூண்டு வைத்து மீன்பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

News April 24, 2024

உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி முகாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த SC/ST மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் என் கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த பணிமனை பயிற்சி முகாம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

நந்தி சிலையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.660 அடியாக குறைந்ததால் நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பண்ணவாடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!