Tamilnadu

News April 24, 2024

தென்காசியில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

image

தென்காசி நகராட்சி, ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் ,படியும் ,சுகாதார அலுவலர், மற்றும் ஆய்வாளர்கள் அறிவுரையின்படியும், இன்று காலையில் தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News April 24, 2024

மயிலாடுதுறையில் ஆட்சியர், எஸ்பி ஆய்வு

image

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் ஒன்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தணிக்கை செய்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: நீச்சல் பயிற்சி பலர் ஆர்வமுடன் பங்கேற்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் வெயில் தாக்குவதால் மக்கள் இளநீர், நுங்கு, பழச்சாறு, மோர் அருந்தி தங்களை வெப்பத்திலிருந்து காத்து வருகின்றனர்.அது போக மூன்று வேளையும் குளிர்ந்த நீரில் குளித்து வருகின்றனர். இதனிடையே நாமக்கல் ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரசாங்கத்திலும் நீச்சல் குளத்தில் கோடைக்கால 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

News April 24, 2024

மயிலாடுதுறையில் பிரதான சாலையில் பள்ளம்

image

மயிலாடுதுறை நகரத்தில் பட்டமங்கல தெருவையும் , பெரிய கடை வீதியையும் இணைக்கும் இடத்தில் குழாய் பதிப்பதற்காக சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடி சாலையை சமன்படுத்தாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சாலையை கடக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 24, 2024

கட்டுப்பாட்டு அறையில் அதிரடி ஆய்வு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் க.ச.நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

News April 24, 2024

சிறப்பு இரயில் இயக்கம்

image

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக  மெமு சிறப்பு ரயில், ஏப்.23ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தி.மலையை சென்றடையும். தி.மலை-சென்னை கடற்கரை மெமு சிறப்பு ரயில் தி.மலையில் இருந்து ஏப்.24ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதேநாளில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

காஞ்சியில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பாஜக சார்பில் மாநகர மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தீர்க்க முக்கிய வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலை, தெரு பகுதியில் குடிநீர் மற்றும் மோர் வழங்கி பொதுமக்களின் தாகத்தை தீர்த்தனர்.

News April 24, 2024

தர்மபுரி அருகே உயர்கல்வி வழிகாட்டல்

image

தர்மபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் -2024 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி துவங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

News April 24, 2024

நாமக்கல்: மின்னணு இயந்திரங்கள் அறையில் ஆய்வு

image

திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் நடத்தும், அலுவலருமான மருத்துவர் உமா அவர்கள் இன்று பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 24, 2024

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை ஊராட்சியில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். ஆய்வின் போது ஆட்சியர் மரு.ச.உமா உள்ளிட்டோர் மாஸ்க் அணிந்திருந்தனர்.

error: Content is protected !!