India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1300 மீ உயரமும், 300 கிமீ நீளமும் கொண்ட கொல்லிமலை, 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான இந்த வளைவுகள் 46.7 கிமீ நீளம் கொண்டவை. இந்தியாவின் நீண்ட கொண்டைஊசி வளைவு சாலை இதுவே. மலையின் உச்சியில் ஆகாய கங்கை அருவியும், சிவன் கோவிலும் உள்ளது. இந்த வளைவினாலேயே இம்மலை, ‘மரணத்தின் மலை’ என்றொரு பெயரும் பெற்றுள்ளது. வாகனம் ஓட்டுவதை நேசிப்பவர்களுக்கு ஏற்ற சாலையாகவும் உள்ளது.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தடையில்லா குடிநீர் வழங்குவது குறித்த அனைத்து துறை அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் மேலும் குடிநீர், சொத்து வரி நிலுவை இல்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திட்ட இயக்குனர் லோகநாயகி கலந்து கொண்டார்.
தர்மபுரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அதியமான் கோட்டையில் உள்ளது சென்றாய பெருமாள் கோவில். இக்கோவில் மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் அழகிய 13ஆம் நூற்றாண்டின் வண்ண ஓவியங்களும் அதன் விளக்க எழுத்துக்களும் உள்ளன. இது 500 படிகள் மற்றும் 48 தூண்கள் கொண்ட மலைக் கோவிலாகும். இக்கோவில் ஹொய்சாளர்கள் கட்டடக்கலையில் அமைந்திருப்பது சிறப்பானதாகும்.
ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் (ஏப்ரல் 23) நேற்று சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமிக்கு ஆராதனை அபிஷேகங்கள் நடைபெற்று ஸ்ரீ காமாட்சி அம்மன் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசையுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். வழிபட்டனர் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சி தொப்பூரில் செயல்பட்டு வந்த டெக்ஸ்டைல்ஸ் கடையில் பூட்டை உடைத்து நேற்று(ஏப்.23) இரவு ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள புடவைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள நகைக் கடை உட்பட 5 கடைகளில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்புவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் கடந்த 4 நாட்களாக பூட்டியே கிடைக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம் போன்ற எந்த அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. இதனால் பொது மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருந்தது. தேர்தல் முடிந்தும் திருப்புவனம் விஏஓ அலுவலகம் மூடியே கிடக்கிறது. தினமும் பொதுமக்கள் வந்து திரும்பி செல்கின்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரைக்காலில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அரையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மணிகண்டன் அந்த மையத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சிடிவி கேமராவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், கீழ்நாச்சிப்பட்டு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9942011945 என்ற எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம்.
மழை பெய்து வெப்பம் தணிவதற்காகவும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், நாடு செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் சிவாச்சாரியார்கள்,வருணபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தனர். பிறகு காவிரி ஆற்றில் ஒரு மணி நேரம் சிவாச்சாரியார்கள் இறங்கி ஜெபித்தனர்.
Sorry, no posts matched your criteria.