India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஊடகங்களில் வரும் செய்திகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திக்கை (38) கடந்த 15ம் தேதி 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை விரோதம் காரணமாக நடந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பாகலூர் போலீசில் பிரதாப் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் துரித உணவுகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும்
8903363396 என்ற எண்ணை அழைக்க கூறப்பட்டுள்ளது.
முத்துக்கடை பகுதியை சேர்ந்த பெர்லின் என்பவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய மூத்த மகளிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் (54) என்பவர் பாலியல் அத்துமீறலில் கொடுத்துள்ளார். ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாதின் நேற்று(மார்ச் 17) பாதிரியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து பொது இடத்தில் நடப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று(மார்ச் 17) அதிரடியாக அகற்றினர்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. நேற்று திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி, சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனிடையே நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய இரண்டுக்கும் 5, 58, 400 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது சுமைதாங்கி. இந்த ஊரை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற பாலாஜி (34). மைக் செட் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று அதிகாலை அவரின் வயல்வெளிக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரின் மனைவி வனஜா தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்படி திருஉத்தரகோசமங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியலூரில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் சுவர் ஓவியங்கள், சுவரொட்டிகள் அழித்தல், பேனர் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகராட்சி, 2ஆவது மண்டல அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேற்று, ‘சீல்’ வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.