Tamilnadu

News March 18, 2024

விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 18, 2024

திருச்சி ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம் மற்றும் தொழில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

News March 18, 2024

ஆற்காடு நகராட்சிக்கு ஆயிரம் பூவரசு மர விதைகள்

image

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நடராஜ் நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் பல்வேறு இயற்கை பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் ஆயிரம் பூவரசு மர விதைகளை ஆற்காடு நகராட்சிக்கு வழங்கினார்.

News March 18, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு பெட்டி

image

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த புகார் மனுக்களை போட்டு சென்றனர்.

News March 18, 2024

வேட்பு மனுவை முதல் ஆளாக பெற்றுச் சென்ற நாம் தமிழர் 

image

பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 20-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா இன்று முதன் முதலாக வேட்பு மனுவை அதிகாரிகளிடம் வாங்கி சென்றார்.

News March 18, 2024

சென்னையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் பணிகள் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் 974 இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது நல்லது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

ஆட்டோவில் ஆடுகளைக் கடத்திய நால்வர் கைது

image

திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கரகம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்தி சென்ற 4 பேரை அப்பகுதியினர் மடக்கி பிடித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர்கள் அம்பத்தூரை சேர்ந்த தீபக்குமார், கௌதம், சசிகுமார் மற்றும் ஹரிஹரன் என்பது தெரியவந்தது.

News March 18, 2024

நல வாரியங்கள் மூலம் ரூ.68.38 கோடி நலத்திட்டம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த 2.5 ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 97,761 பேருக்கு ரூ.68.38 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு மற்றும் இதர 16 வகை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் பிரிவில் 83,553 பேருக்கு கல்விக்காக மட்டும் ரூ.18.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

திருப்பத்தூர் அருகே 9 லட்சம் பறிமுதல்

image

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

News March 18, 2024

விழுப்புரம்: உதவியவர்க்கு ஏற்பட்ட அவலம்!

image

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை, கண்டெயினர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநர் அந்தரத்தில் தொங்கினார். அப்போது, அவருக்கு உதவுவதற்காக சென்னை நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்த கோவையை சேர்ந்த முரளி சங்கர் என்ற வாலிபர் இறங்கி சென்று உதவ சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பேருந்தில் பார்த்தபோது முரளி வைத்திருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.

error: Content is protected !!