India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் விஷ்ணு என்பவரும் பழைய ஜோலார்பேட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்ததாக ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளக்கரையை சேர்ந்தவர் மேகநாதன் (28)கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 1 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று (ஏப்-25) இவரும் தனது நண்பரான அஜித் என்பவரும் ஒரே டூவீலரில் போச்சம்பள்ளி நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக்டர் மோதியதில் மேகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொண்டி அருகே காட்டுப்பகுதிகளில் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. நேற்று புள்ளிமான் ஒன்று தொண்டி புதுக்குடி மீனவ கிராமத்திற்க்குள் இரை தேடிச் சென்றுள்ளது. அங்கு கடல் நீரை குடித்த மான் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் உடற்கூறுறாய்வுக்கு பின்னர் மானை புதைத்தனர்.
வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அணிக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 14, 16 வயது பிரிவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உடையோர் பிறப்பு சான்றிதழுடன் விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையில் ஏப்.27 ல் சீலப்பாடி பிரசித்தி வித்யோதயா பள்ளியில் நடக்க உள்ள வீரர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என செயலாளர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். கோடை வெயில் முடியும் வரை மழலை பள்ளிகளை இயக்க வேண்டாம் எனவும், 100 நாள் பணியின் போது முதியவர்கள் நண்பகல் 12 மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, பெருந்துறை தாலுக்கா உட்பட்ட சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கர்நாடக மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாளை நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளனர். அதேபோல பனியன் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடிய கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, அசாதாரண உயிரிழப்புகள் (மனிதர்கள்/ பறவைகள்) போன்ற தகவல்களை தாங்களாகவே முன்வந்து https://lhip.mahfw.gov.in/cbs/-1/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அரசுக்கு தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதின் மூலம் பொது சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க இயலும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 43 மதுபாட்டில்கள், 180 லிட்டர் கள்ள சாராயம், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
பழனி சாலையில் உள்ள இடையபட்டியில் பகவதியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா இன்று 25.04.2024- துவங்கியது. இன்று நடந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு முகூர்த்த கால் ஊன்றி கோவில் திருவிழாவை துவங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த திருவிழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது முக்கியமானதாகும்.
Sorry, no posts matched your criteria.