Tamilnadu

News April 26, 2024

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கம்பம் தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜமீன்தார் சக போலீசாருடன் நேற்று ரோந்து சென்றபோத கம்பம் ஆங்கூர் பாளையம் ரோடு நகராட்சி குப்பை கிடங்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விற்றுக்கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடம் இருந்த 72 லாட்டரி சீட்டுகளையும்,லாட்டரி விற்ற பணம் ரூ. 900 யும் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

News April 26, 2024

வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தில் முருகன்!

image

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டப் பிளையார் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் கடைசி விழாவாக தெப்ப உத்ஸவம் நேற்று(ஏப்.25) நடைபெற்றது. இதில், கோயில் அருகிலுள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி – தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

News April 26, 2024

மாநில எல்லை சோதனைச் சாவடியில் ஆய்வு

image

கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் இரண்டாம் கட்டமாக மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம், பர்கூர் பகுதியில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தட்டக்கரை வன அலுவலகம் முன்பு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி. ஜவகர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

News April 26, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 26, 2024

செந்துறையில் கோடைகால நீர் மோர் பந்தல்

image

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் MA, Ex. மலை செந்துறையில் நேற்று (25.04.2024) தண்ணீர் பந்தலை பொதுமக்களின் நலனுக்காக திறந்து வைத்து நீர்,மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவகளை வழங்கினார். உடன் செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் எஸ். ரமேஷ் மற்றும் ஒன்றிய சார்பு அணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

News April 26, 2024

பேருந்துகள் குறைப்பு பயணிகள் அவதி

image

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 39 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை,பேருந்து பழுது காரணமாக 30 வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது மதுரை,தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பேருந்து சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

News April 26, 2024

பிரம்மோற்சவ விழா நிறைவு நாள்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் பத்தாம் நாளான நேற்று சுவாமி ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் தன்னுடைய மருமகன் வள்ளி தெய்வானை,சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியுடன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 26, 2024

பாலக்கோடு அருகே ஆலமரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்!

image

பாலக்கோடு வட்டம், ஓசூர் நெடுஞ்சாலை சூடப்பட்டி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆலமரத்தில் மர்ம நபர்கள் நேற்று(ஏப்.25) தீ வைத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு குழாய் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

News April 26, 2024

இன்று மி்ன்தடை அறிவிப்பு

image

பழனி துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஆயக்குடி பீடரில் கொடைக்கானல் சாலை உயர் அழுத்த மின் பாதையில் பாராமரிப்பு பணிகள் இன்று (ஏப்.26) நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை அய்யம்புள்ளி, ஆலமரத்துக்களம், தேக்கம்,தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 26, 2024

கூடலூர் ஸ்ரீஜான் அணி வெற்றி

image

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கிரிக்கெட் அணிகள் [ஏ.பி.சி.3 டிவிஷன் ஆக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  கோத்தகிரி காந்தி மைதானத்தில் சி டிவிஷன் பிரிவு போட்டியில் கூடலூர் ஸ்ரீ ஜான் அணி மற்றும் குன்னூர் ஹில்ஸ் குயின் அணி பங்கேற்று விளையாடினர். 33 ஓவர்கள் கொண்ட போட்டியில் கூடலூர் ஸ்ரீஜன் அணி அணி 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

error: Content is protected !!