Tamilnadu

News March 18, 2024

திருநெல்வேலியில் நாங்குநேரி எம்எல்ஏ போட்டியா?

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News March 18, 2024

அரியலூர்: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

லாரி தலைகுப்புற கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

image

கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

10 ஆண்டுகளுக்கு பின் சேலம் வரும் மோடி

image

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை மதியம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் இரும்பாலை வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலம் வருகை தர இருப்பது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 18, 2024

தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.

News March 18, 2024

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் வலைதள பதிவில் இன்று வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், பொதுமக்கள் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளது.

News March 18, 2024

வாலிபரை தாக்கி லேப்டாப், பணம் பறிப்பு

image

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபியுதயா என்பவர் நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 4 பேர் அபியுதயாவை தாக்கி 2 லேப்டாப், செல்போன், ரூ.2000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 18, 2024

நீலகிரி: தேயிலையில் மைட்ஸ் நோய் பாதிப்பு

image

நீலகிரி, தேயிலையில் மைட்ஸ் நோய் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி போஜராஜன் இன்று(மார்ச் 18) கூறுகையில், “வறட்சியால், ‘மைட்ஸ் ‘ நோய் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றார்.

News March 18, 2024

திருவாரூர்:  பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

உலகப் புகழ்பெற்ற ஆழி தேரோட்டம் மார்ச். 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஊது குழல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் ஊது குழல்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!