India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் நேற்று (ஏப்.25) 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

திருமுல்லைவாயில் அடுத்த கணபதி நகரில், வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்து.இவர் நேற்றிரவு கஞ்சா போதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டியும்,பட்டா கத்தியால் 12 பேரை வெட்டினர்.இதுகுறித்த புகாரின்பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான விஷ்ணு மற்றும் அபினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முத்துவை தேடி வருகின்றனர்.
சேலம் மத்திய சிறைச்சாலையில், ரமேஷ் என்ற கைதி இன்று(ஏப்.26) சிம் கார்டை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம் கார்டை மீட்ட சிறை துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உறவினர்களை சந்திக்க கைதி ரமேஷுக்கு 3 மாதம் தடைவிதித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று(ஏப்.25) பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து மோட்டார் வாகனச் சட்டம் 1988 – 199A பிரிவு படி, 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இது போன்று அலட்சியமாக உள்ள பெற்றோர், பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி அண்ணா சிலை சிந்தாமணி அருகே இன்று செல்வராஜ் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, திருச்சியில் சிமெண்ட் இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று உசிலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டூவீலரில் மோதியது. இதில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை திரு.வி.க தெருவை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கோதை ஆண்டாள். இவர் இன்று காலை வீட்டு வாசலின் முன்பு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக மூதாட்டி கோதை ஆண்டாள் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.