India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன் (எ) லொட்டை ஆனந்தன். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(ஏப்.26) இரவு வீட்டு வாசலில் போதையில் இருந்தவரை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. அருகில் இருந்தவர்கள் ஆனந்தனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்திரை பெருவிழாவின் 13 ஆம் நாளான நேற்று இரவு சர்வ பிராயச்சித்தா அபிஷேகம் நடைபெற்றது. சித்திரா பௌர்ணமி முன்னிட்டு இரண்டரை தினங்கள் தொடர்ந்து பாலபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், முருகனின் திருமேனியில் படிந்த பாலாடைகள் அனைத்தும் அபிஷேக திரவியங்கள் கொண்டு எடுக்கப்பட்டு தற்போது விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி அருள்மிகு அஷ்ட புஜ தவயோக வன வாராகி அம்பாள் ஆலயத்தில் பஞ்சமி பூஜை நாளை (ஏப்.28) நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு ஹோமம் தொடங்கி பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க கோவில் நிர்வாகிகள் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்கு காமராஜர் அணை திறக்கப்பட்டுள்ளது . அதனால் ஆற்று பகுதியில் காலை , மாலை நேரங்களில் வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன . தெப்பக்காடு வாழ் பழங்குடியினர் குளியல் போடுகின்றனர் . இந்நிலையில் முதுமலை பகுதிகளில் மழை அறிகுறி உள்ளதாக இயற்கை சூழல் ஆர்வலர் மானஸ் சிவதாஸ் தெரிவித்தார்.
சிறுபான்மையினா் மீது அவதூறு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்குவாசல் சந்தைப் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் விஜயராஜன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல் 26) டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சார ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. செஞ்சி சாலையில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள 2 அரசு மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார் மற்றும் பார்த்திபன் தலைமையில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகாம் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். அதில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து விளையாட்டு போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு கலந்து கொள்ளலாம்.
தேனியில் 46,144 செம்மறியாடுகளும் 60,081 வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைத்து, ஏப் 29 முதல் மார்ச் 28 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வாழப்பாடி அருகே தும்பல்வனச்சரகம் , பெலாப்பாடி காப்புக்காடு ஒட்டியுள்ள ஓடைப் பகுதியில் நாய்களால் புள்ளிமான் ஒன்று துரத்தி வரப்பட்டுள்ளது. இதனை அறுத்து கறியை பங்கிட்டுக்கொள்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று மான் கறி வைத்திருந்த பெரியசாமி, மாயவன் உட்பட 8 பேரை பிடித்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் சிறுகாஞ்சி பகுதியில் போடப்பட்ட சிமெண்டு சாலையை அதேப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், மேலும் அங்கு கற்களை வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று (ஏப்ரல் 26) மாலை வேலூர் ரவுண்டானா அண்ணாசாலையில் திடீரென அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.