Tamilnadu

News April 27, 2024

நாமக்கல்லில் 8,000 போ் நீட் தோ்வு எழுதுகின்றனர்!

image

நாமக்கல் மாவட்டத்தில், நீட் தோ்வை 11 மையங்களில் 8 ஆயிரம் மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.நீட் தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.நிகழாண்டில் + 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள்,வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் ஆயிரம் போ் கூடுதலாக மொத்தம் 8 ஆயிரம் போ் நீட் தேர்வு எழுதுகின்றனர்

News April 27, 2024

வாலாஜா அருகே அதிமுக சார்பில் நீர், மேர் பந்தல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக செயலாளர் W.G.மோகன் மற்றும் பெல்லியப்பா நகரில், ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர், மோர், தண்ணீர் பந்தலை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் நேற்று(ஏப்.26) திறந்து வைத்தார்.

News April 27, 2024

காஞ்சியில் சந்திர பிரபை பவனி உலா

image

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற சொர்க்கவாசல் தலமாகிய ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருக்கோயிலில்,  நேற்று(ஏப்.26) இரவு 7 மணி அளவில் 4ம் நாள் விழாவில் சந்திர பிரபை அழகிய மலர் அலங்காரத்துடன் காஞ்சிபுரம் வீதிகளில் பவனி வந்தார். பெருமாளை தரிசிக்க மாலை முதல் மக்கள் கூடி அமர்ந்து தரிசித்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

News April 27, 2024

திருவாரூர்: தெப்ப உற்சவவிழா

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு அருகில் உள்ள குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மகிழம்பூ விநாயகர் சீதா ராமர் எழுந்தருளிய முதல் தெப்போற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

News April 27, 2024

கடலூர்:தர்பூசணி விலை இரு மடங்கு உயர்வு

image

சிதம்பரம் அண்ணாமலை நகர், சிவபுரி மெயின்ரோடு, கொற்றவன்குடி தோப்பு போன்ற பகுதிகளில் தர்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பீஸ் 10 ரூபாய்க்கு விற்பனையான தர்பூசணி தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்கள் அதிக அளவில் வாங்குவதாலும் , தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

News April 27, 2024

தடுப்புச் சுவரில் மோதி 2 பேர் பலி

image

தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளிகள் கார்த்திகேயன் மற்றும் வடிவேல் இருவரும் எதிர்பாராதமாக சாலை தடுப்பில் மோதி நேற்று படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளிகள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு

image

காரைக்காலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று பாதுகாப்பு குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவை பார்வையிட்டு பல்வேறு பாதுகாப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

News April 27, 2024

தமிழக அரசை பாராட்டிய ஐகோர்ட்

image

அனைத்து மத்திய சிறைகளிலும் வழக்கு விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தொடுதிரை வசதி செய்ததற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை கைதிகளின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகளில் உள்ள இந்த தொடுதிரை இயந்திரம், சிறை கைதிகளுக்கு மிகவும் பயனுள்ளது என்று கூறி பாராட்டியது.

News April 27, 2024

குமரி அருகே சித்திரை திருவிழாவில் மா.செ.

image

குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அறப்புரை ஊர் அருள்மிகு ஸ்ரீ வாதையன் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று(ஏப்.26) அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் ஐயப்பன் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 27, 2024

ஆர்.கே.நகரில் ரவுடி வெட்டிக் கொலை

image

தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன் (எ) லொட்டை ஆனந்தன். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(ஏப்.26) இரவு வீட்டு வாசலில் போதையில் இருந்தவரை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. அருகில் இருந்தவர்கள் ஆனந்தனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!